Vayoshreshtha Samman 2018

முதியோர் தினத்தையொட்டி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில் வயோஸ்ரேஷ்ட சம்மான்-2018  ( Vayoshreshtha Samman-2018 ) என்ற பெயரில் மூத்த குடிமக்களுக்கான தேசிய விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

மொத்தம் 13 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தமிழ்நாட்டிற்கு 2 விருது, கர்நாடத்துக்கு 3 விருது, ஹரியாணா, உத்தரப்பிரதேசம், மணிப்பூர், சத்தீஸ்கர் ஆகியவற்றுக்கு தலா ஒன்று உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் சென்னை பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளி நிறுவனர் ஒய்.ஜி. ராஜலக்ஷ்மி பார்த்தசாரதிக்கு  மூத்த குடி மக்களுக்கான விருது வழங்கப்பட்டது.
மேலும், மூத்த குடிமக்களுக்கு சிறப்பான சேவை செய்ததற்காக மதுரை மாவட்டத்துக்கும் விருது வழங்கப்பட்டது. 2017-18-ஆம் ஆண்டில் மதுரை மாவட்ட ஆட்சியராக வீர ராகவ ராவ் இருந்தார். அப்போது அவர் மூத்த குடிமக்களுக்கு சிறப்பான சேவையாற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. தற்போது ராமநாதபுரம் ஆட்சியராக உள்ள அவர், இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.

மேலும், மருத்துவத் துறையில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான இதய அறுவை சிகிச்சை செய்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் டாக்டர் பி. வேணுகோபால், உத்தரப்பிரதேச மாநிலம் பக்பாத் கிராமத்தில் 300க்கும் அதிகமான ஆண், பெண்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்த ராஜ்பால் சிங் உள்ளிட்ட பலருக்கு மூத்த குடிமக்கள் விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!