S~400 Triumf

இந்தியா- ரஷ்யா  இடையிலான 19வது ஆண்டுக் கூட்டம் டெல்லியில் அக்டோபர் 05ல்  நடைபெற்றுள்ளது.  இதில்    ரஷ்ய அதிபர்  புதின்  கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையே 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

8 ஒப்பந்தங்களில் மிகவும் முக்கியமானது, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா S-400 Triumf  ரக அதிநவீன வான்வெளி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவதாகும், இந்த ஏவுகணைகளை ரூ.37 ஆயிரம் கோடி செலவில் இந்தியா வாங்குகிறது.

S-400 Triumf ரக ஏவுகணை எதிரி நாட்டு விமானங்களை சுட்டு வீழ்த்த பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏவுகணை கருவியில் நான்கு விதமான ஏவுகணைகள் பொறுத்தப்பட்டிருக்கும்.  அவை, 400, 250, 120, 40 கி.மீ தூரம் சென்று தாக்கக்கூடிய திறன் படைத்தவை. இந்த ஏவுகணை சிஸ்டத்தில் ஒரு யூனிட்டில் 8 லாஞ்சர்கள், 112 ஏவுகணைகள், ஒரு கட்டுப்பாட்டு மையம் மற்றும் வாகனங்கள் இடம் பெற்றிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!