Parker Solar Probe

சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு செய்யும், பார்க்கர் சூரிய ஆய்வு விண்கலத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஆகஸ்ட் 12ல்  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதற்காக 1.5 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி).

புளோரிடாவின் கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து டெல்டா 4- ஹெவி ராக்கெட்  மூலம் பார்க்கர் விண்கலம்,  விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஆளில்லா விண்கலம் ஒரு கார் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு, நமது சூரிய வளி மண்டலத்தில் சூரியனுக்கு மிகமிக அருகில் சென்று இது ஆய்வு செய்யும்.

அபரிமிதமான வெப்பத்தில் இருந்து காப்பாற்ற 4.5 அங்குலத்துக்கு ‘அல்ட்ரா வெப்ப தகடுகள் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளன. அதனால் சூரியனை விண்கலம் நெருங்கும்போது அதிக வெப்பத்தில் வெடித்து சிதறாமல் இருக்கும். இந்த விண்கலம் ஒரு மணி நேரத்துக்கு 4,30,000 மைல் வேகத்தில் செல்லும். பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு வெளியில், மனிதர்கள் உருவாக்கிய பொருள் ஒன்று இவ்வளவு வேகத்தில் செல்வது இதுவே முதல்முறை.

சூரியனில் இருந்து காந்தப் புயல்கள் வெளிப்படுகின்றன. இதனால் பூமியில் சில நேரங்களில் தொலைத்தொடர்புகள், மின் கட்டமைப்புகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, இந்த பார்க்கர் விண்கலம் காந்தப் புயல்கள் குறித்த ஆய்வில் முக்கியமாக ஈடுபடும். சூரியனைச் சுற்றியுள்ள ஒளிவட்டத்தை ஆராயும்.

இந்தப் பார்க்கர் விண்கலம் 7 ஆண்டுகள் சூரியனுக்கு மிக அருகில் இருந்து ஆய்வு செய்யும். அங்கிருந்து புகைப்படங்கள், தகவல்களை அனுப்பும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!