ISI தலைவர்

பாகிஸ்தான் உளவுத்துறை தலைவராக ( ISI ) லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்பாக ராணுவ உளவுப்பிரிவில் தலைவராக பணியாற்றி வந்தார். சமீபத்தில்தான் இவருக்கு லெப்டினன்ட் ஜெனரல் அந்தஸ்தை ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா தலைமையிலான ராணுவ பதவி உயர்வு வாரியம் வழங்கியது. இவர் வடக்கு பிராந்திய ராணுவ தளபதி பதவியிலும் இருந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இவருக்கு ‘ஹிலால் இ இம்தியாஸ்’ என்ற பாகிஸ்தானின் இரண்டாவது உயர்ந்த தேசிய விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!