IL and FS

பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்திவரும் IL & FS ( Infrastructure Leasing & Financial Services Ltd ) நிறுவனம் திவாலாகும் சூழ்நிலையில் இருப்பதால், அந்நிறுவனத்தை மத்திய அரசு கைப்பற்றியுள்ளது.

IL & FS நிறுவனத்தை நிர்வகிக்க  உதய் கோடக் தலைமையில் ஆறு பேர் கொண்ட புதியஇயக்குநர் குழுவை அரசு  அமைத்துள்ளது. முன்னாள் ஐசிஐசிஐ வங்கித்தலைவர் ஜி.சி சதுர்வேதி, முன்னாள்ஐஏஎஸ் அதிகாரியும், டெக் மஹிந்திரா தலைவருமான வினித் நய்யார், முன்னாள் செபி தலைவர் ஜி.என்.பாஜ்பேய், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் மாலினி சங்கர், நந்தா கிஷோர் ஆகியோர் இயக்குநர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் நிறுவனத்தின் விவகாரத்தில் அரசு உடனடியாக  நடவடிக்கை எடுப்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன் 2009ல், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் விவகாரத்தில் அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!