விளையாட்டு

பால்ஆன் டி ஆர் விருது

பால்ஆன் டி ஆர் விருது

பிரான்ஸ் கால்பந்து இதழ் சார்பில் ஆண்டுதோறும் பால்ஆன் டி’ஆர் விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள 180 பத்திரிகையாளர்கள் வாக்களித்து இந்த விருதுக்கான வீரரை தேர்வு செய்வார்கள். இந்த ஆண்டுக்கான பால்ஆன் டி’ ஆர் விருதை குரோஷியா அணியின் நட்சத்திர கால்பந்து வீரர்  லூக்கா மோட்ரிச் வென்றுள்ளார். முதன்முறையாக பெண்கள் பிரிவில் இம்முறை பால்ஆன் டி’ ஆர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை நார்வே வீராங்கனை அடா ஹெகர் பெர்க் பெற்றார். 21 வயதுக்குட்பட்டோருக்கான கோபா டிராபி கிளியான் பாப்பேவுக்கு வழங்கப்பட்டது.
ஆசிய பாரா விளையாட்டு

ஆசிய பாரா விளையாட்டு

3வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி, ஜகார்த்தா,  இந்தோனேஷியா. வில்வித்தை போட்டியில் ஆண்களுக்கான தனிநபர் ரிகர்வ் இறுதிசுற்றில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங்,  ஜாவ் லிஸ்னேவை (சீனா) வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார். உயரம் தாண்டுதலில் ( T42/63 ) 3 பதக்கங்களையும் இந்தியர்களே வென்றுள்ளனர். ● தங்கம் == சரத்குமார் ( 1.90 மீட்டர் ) ● வெள்ளி == வருண் பாட்டி ( 1.82 மீட்டர் ) ● வெண்கலம் == தங்கவேலு மாரியப்பன் ( 1.69 மீட்டர் ) தமிழ்நாடு
3வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி

3வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்தாவில் நடந்து வரும் 3வது பாரா ஆசிய விளையாட்டு போட்டியில், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சந்தீப் சவுத்ரி 3வது முயற்சியில் 60.01 மீட்டர் தூரம் எறிந்து புதிய உலக சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கமும் வென்றார். தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் சந்தீப் சவுத்ரி கால் அளவில் குறைபாடு கொண்டவர் ஆவார். பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ராஜூ ரக்‌ஷிதா 5 நிமிடம் 40.64 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ராஜூ ரக்‌ஷிதா குறைவான கண்பார்வை கொண்டவர் ஆவார். நீச்சல் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் இந்திய வீரர் ஜாதவ் சுயாஷ் நாராயண் 32.72 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். பெங்களூருவை சேர்ந்த ஜாதவ் சுபாஷ் நாராயண் 2 கைகளையும் பாதி இழந்தவர். நீச்சலுக்கு கை மிகவும் அவச
Youth Olympics

Youth Olympics

இளையோர் ஒலிம்பிக் போட்டி, பியூனஸ்அயர்ஸ், அர்ஜென்டினா. இந்தியாவின் ஜெரேமி லால்ரினங்கா மொத்தம் 274 கிலோ (124 மற்றும் 150) எடையை தூக்கி தங்கம் வென்றுள்ளார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி மற்றும்   இந்திய வீராங்கனை மனு பாகேர் ஆகியோர்  தங்கம் வென்றுள்ளார்கள்.
குல்தீப் யாதவ் சாதனை

குல்தீப் யாதவ் சாதனை

அனைத்து ரக (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) கிரிக்கெட் போட்டிகளிலும் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற  சாதனையைப் இந்திய பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் படைத்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் குல்தீப் யாதவ் இந்த அரிய சாதனைப் படைத்த 2வது இந்திய வீரர் ஆவார். இதற்கு முன்பாக புவனேஸ்வர் குமார் இச்சாதனையை செய்த முதல் இந்திய பந்துவீச்சாளராக திகழ்கிறார். 3 ரக போட்டிகளிலும் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் : டிம் சௌத்தி (நியூஸிலாந்து) அஜந்தா மெண்டீஸ் (இலங்கை) உமர் குல் (பாகிஸ்தான்) லசித் மலிங்கா (இலங்கை) இம்ரான் தாஹிர் (தென் ஆப்பிரிக்கா) புவனேஸ்வர் குமார் (இந்தியா) குல்தீப் யாதவ் (இந்தியா)
பெனஸ்டா தேசிய டென்னிஸ்

பெனஸ்டா தேசிய டென்னிஸ்

புது தில்லியில் நடைபெற்ற பெனஸ்டா தேசிய டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் சித்தார்த் விஸ்வகர்மா புதிய சாம்பியன் ஆனார். மகளிர் பிரிவில் மஹக் ஜெயின் தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.
பட்டம் வென்ற இந்திய ஜோடி

பட்டம் வென்ற இந்திய ஜோடி

மியான்மரின் மண்டாலே நகரில் நடைபெற்று வரும் ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் 15 வயது பிரிவில் இந்திய மகளிர் மேக்னா ரெட்டி - தஸ்னிம் மிர் ஜோடி  தங்கப்பதக்கம் வென்றது.
கோப்பையை வென்ற இளம் இந்திய படை

கோப்பையை வென்ற இளம் இந்திய படை

டாக்காவில் நடைபெற்ற ஜூனியர் ( 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ) ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
கோப்பை வென்ற கீர்த்தனா

கோப்பை வென்ற கீர்த்தனா

ரஷ்யாவின் செயின்ட் பீட் டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற 16 வயதுக் குட்பட்டோருக்கான உலக ஐபி எஸ்எப் ஸ்னூக்கர் போட்டியில் இந்திய சிறுமி கீர்த்தனா பாண்டியன் கோப்பையை வென்றுள்ளார்.
சீன ஓபன் டென்னிஸ்

சீன ஓபன் டென்னிஸ்

பீஜிங்கில் நடைபெற்ற சீன ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் லாத்வியா வீராங்கனை செவஸ்டோவாவை வீழ்த்தி டென்மார்க்கின் வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
error: Content is protected !!