விருது

பூமியின் சாம்பியன்கள்

பூமியின் சாம்பியன்கள்

உலக அளவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொண்ட ஆறு பேருக்கு ஐ.நா. ‘பூமியின் சாம்பியன்கள்’ விருதை செப்டம்பர் 26 அன்று அறிவித்தது. இதில் சர்வதேசச் சூரிய ஆற்றல் கூட்டமைப்பைச் சாத்தியப்படுத்தியதற்காக அரசியல் தலைமைப் பண்பு பிரிவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கும் இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், நிலைத்தன்மைவாய்ந்த ஆற்றல் பயன்பாட்டுக்காக கொச்சின் சர்வதேச விமான நிலையத்துக்குத் தொலைநோக்குள்ள தொழில்முனைவோர் பிரிவில் இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது.
UNIATF Award

UNIATF Award

தொற்றா நோய்களை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக  செயல்படுவோருக்கு ஐ.நா. சபையின் சார்பில் வழங்கப்படும் UN Interagency Task Force (UNIATF)  விருது இந்தியாவைச் சேர்ந்த மனோஜ் ஜலானிக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Vayoshreshtha Samman 2018

Vayoshreshtha Samman 2018

முதியோர் தினத்தையொட்டி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில் வயோஸ்ரேஷ்ட சம்மான்-2018  ( Vayoshreshtha Samman-2018 ) என்ற பெயரில் மூத்த குடிமக்களுக்கான தேசிய விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 13 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தமிழ்நாட்டிற்கு 2 விருது, கர்நாடத்துக்கு 3 விருது, ஹரியாணா, உத்தரப்பிரதேசம், மணிப்பூர், சத்தீஸ்கர் ஆகியவற்றுக்கு தலா ஒன்று உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் சென்னை பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளி நிறுவனர் ஒய்.ஜி. ராஜலக்ஷ்மி பார்த்தசாரதிக்கு  மூத்த குடி மக்களுக்கான விருது வழங்கப்பட்டது. மேலும், மூத்த குடிமக்களுக்கு சிறப்பான சேவை செய்ததற்காக மதுரை மாவட்டத்துக்கும் விருது வழங்கப்பட்டது. 2017-18-ஆம் ஆண்டில் மதுரை மாவட்ட ஆட்சியராக வீர ராகவ ராவ் இருந்தார். அப்போது அவர் மூத்த குடிமக்களுக்கு ச
நான்சென் அகதி விருது

நான்சென் அகதி விருது

UNHCR’s Nansen Refugee Award 2018  ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் சார்பிலான நான்சென் அகதி விருது, தெற்கு சூடானைச் சேர்ந்த அறுவைசிகிச்சை நிபுணர் Dr. Evan Atar Adaha க்கு வழங்கப்பட்டுள்ளது.
வாழ்நாள் சாதனையாளர்

வாழ்நாள் சாதனையாளர்

பிரபல கடம் வித்வான் விக்கு விநாயக்ராமுக்கு சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என மியூசிக் அகாடமி அறிவித்துள்ளது. மியூசிக் அகாடமி அமைப்பானது மிகச்சிறந்த கலைஞர்களுக்கு எப்போதாவது ஒருமுறை சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கிறது. அந்த வகையில், இதுவரை நடனக் கலைஞர் கமலா லட்சுமி நாராயணன், வயலின் கலைஞர் லால்குடி ஜி. ஜெயராமன் ஆகியோருக்கு இவ்விருதை வழங்கியுள்ளது.
காந்திக்கு  தங்கப்பதக்கம்

காந்திக்கு தங்கப்பதக்கம்

அமெரிக்க பாராளுமன்றத்தால் அளிக்கப்படும் மிக உயரிய தங்கப்பதக்கம் விருதுக்கு அகிம்சை கொள்கையை நிலைநாட்டிய மகாத்மா காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 1997ம் ஆண்டில் அன்னை தெரசா, 1998ம் ஆண்டில் நெல்சன் மண்டேலா, 2000ம் ஆண்டில் போப் இரண்டாம் ஜான் பால், 2006ம் ஆண்டில் தலாய் லாமா, 2008ம் ஆண்டில் ஆங் சான் சூகி, 2010ம் ஆண்டில் முஹம்மத் யூனுஸ், 2014ம் ஆண்டில் ஷிமோன் பேரெஸ் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
Champions Of The Earth

Champions Of The Earth

ஐ.நா.சபை 2005ம் ஆண்டு முதல் பூமியின் சாம்பியன் ( Champions Of The Earth ) என்னும் விருதை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விருது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் தீவிரமாக செயல்படும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், சமூக அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பூமியின் சாம்பியன் விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கவேண்டும் என்பதும் முக்கியம். மேலும் வறுமை, சுகாதாரம், உணவு, விவசாயம், குடிநீர், எரிசக்தி, துப்புரவு, மனித குடியேற்றம், பருவ நிலை மாற்றம், நுகர்வு மற்றும் உற்பத்தி, கடல்கள், பிராந்திய சுற்றுச்சூழல் அமைவு உள்ளிட்ட 17 முக்கிய அம்சங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றில் சுற்றுச்சூழலுடன் தொடர்புடைய பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டிரு
இளம் அறிஞர் விருது

இளம் அறிஞர் விருது

மதுரையைச் சேர்ந்த ராஜலட்சுமி நந்தகுமார் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். இவர் சாதாரண ஸ்மார்ட் போனை ‘சோனார்’ சாதனமாக மாற்றும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து உள்ளார். (சோனார் என்பது நீரில் மூழ்கிய பொருட்களை ஒலி அலைகளை கொண்டு கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் ஆகும்) இந்த கண்டுபிடிப்புக்காக ராஜலட்சுமி நந்தகுமாருக்கு, 2018-ம் ஆண்டுக்கு உரிய அமெரிக்காவின் புகழ் பெற்ற ‘மார்கோனி சொசைட்டி பால் இளம்அறிஞர் விருது’ கிடைத்து உள்ளது. இந்த விருது 5 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம்) ரொக்கப்பரிசைக் கொண்டது. ராஜலட்சுமி நந்தகுமார் கண்டுபிடித்து உள்ள தொழில் நுட்பத்தினால், உடல் ரீதியான செயல்பாடுகள், சுவாசம் போன்றவற்றை கண்டறிய முடியும், அதுவும் ஒருவரின் உடலை ‘சோனார்’ சாதனம் தொடாமலேயே கண்டுபிடிக்க முடியுமாம். இவரது கண்டுபிடிப
தேசிய நல்லாசிரியர் விருது

தேசிய நல்லாசிரியர் விருது

செப்டம்பர் 05 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக ஆசிரியை ஆர். ஸதி உட்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார். கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியில் உள்ள மதுக்கரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியையாக திருமதி  ஆர். ஸதி பணிபுரிந்து வருகின்றார்.
தூய்மைப் பள்ளி விருது

தூய்மைப் பள்ளி விருது

நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குடிநீர், தூய்மை, சுகாதாரம் ஆகியவற்றை மையமாக வைத்து ‘தூய்மைப் பள்ளி' என்ற விருதை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை (ஸ்வச் வித்யாலயா) வழங்குகிறது. நாடு முழுவதும் இந்த விருதைப் பெற 52 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இதில், புதுச்சேரி திருக்கனூர் அருகேயுள்ள கூனிச்சம் பட்டு பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப்பள்ளி 100 சதவீத புள்ளிகள் பெற்று, தேசிய அளவில் முதலிடம் பிடித்திருக்கிறது.
error: Content is protected !!