ராணுவ செய்திகள்

சக்ரா 3

சக்ரா 3

ரஷ்யாவிடம் இருந்து அணு சக்தி கப்பலை 3 பில்லியன் டாலர் மதிப்பில்  10 ஆண்டுகள் குத்தகைக்கு பெற இந்திய பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி அகுலா வகை நீர்மூழ்கிக் கப்பலை வரும் 2025ம் ஆண்டுக்குள் ரஷ்யா இந்தியாவிடம் அளிக்கவேண்டும். இந்திய கடற்படையில் இந்த நீர்மூழ்கிக் கப்பல், சக்ரா மூன்று என அழைக்கப்படும். இந்திய கடற்படைக்கு ரஷ்யாவிடம் இருந்து குத்தகைக்கு பெறும் 3வது கப்பல் இதுவாகும். ஏற்கனவே 1988 ம் ஆண்டு ஒரு நீர்மூழ்கிக் கப்பலை மூன்று ஆண்டுகளுக்கும் 2012ம் ஆண்டில் ஒரு ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை 10 ஆண்டுகளுக்கும் இந்தியா குத்தகைக்கு எடுத்திருந்தது.    
Clear Sky Exercise

Clear Sky Exercise

அமெரிக்கா மற்றும் 6 NATO நாடுகளுடன் இணைந்து Clear Sky 2018 என்ற விமானப்படை பயிற்சியில் உக்ரைன் ஈடுபட்டு வருகிறது.
Sahyog HOP TAC 2018

Sahyog HOP TAC 2018

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வங்காள விரிகுடாவில், முதன்முறையாக இந்தியா கடலோர காவல்படை மற்றும் வியட்நாம் கடலோர காவல்படை இணைந்து Sahyog HOP TAC 2018 என்ற பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
JIMEX 18

JIMEX 18

Japan-India Maritime Exercise (JIMEX) இந்தியா ஜப்பான் இடையிலான கடற்படை பயிற்சி JIMEX 18 , அக்டோபர் 07 முதல் 15 வரை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இதற்குமுன் 2013ல் சென்னையில் JIMEX  பயிற்சி நடைபெற்றுள்ளது.
MPATGM

MPATGM

Man-Portable Anti-Tank Guided Missile (MPATGM) மனிதன் சுமந்து செல்லக்கூடிய டாங்க் எதிர்ப்பு ஏவுகணை MPATGM ஐ DRDO அமைப்பு சார்பில்  மகாராஸ்டிராவின் அகமதுநகரில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ASTRA

ASTRA

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏவுதளம் அமைந்துள்ளது. இங்கிருந்து எஸ்.யு.30 ரக போர் விமானத்தில் இருந்து அஸ்திரா ( ASTRA ) ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. அஸ்திரா ஏவுகணை, கண்ணிற்கு அப்பாற்பட்ட வான் இலக்குகளை, வானிலிருந்தே தாக்கி அழிக்கும் (Beyond Visual Range Air-to-Air Missile – BVRAAM) ஏவுகணையாகும்.
எல்லை மாநாடு

எல்லை மாநாடு

 A joint border conference was held between India and Bangladesh at Aizawl இந்தியா பங்களாதேஷ் இடையிலான எல்லை பேச்சுவார்த்தை, மிசோரம் மாநிலத்தில் Aizwal நகரில் நடைபெற்றுள்ளது.
Exercise Indra 2018

Exercise Indra 2018

இந்தியா மற்றும் ரஷ்யா ராணுவங்கள் இணைந்த பயிற்சி Indra - 2018, உத்தரகாண்ட்டில்  நவம்பர் 18 முதல் 28 வரை நடைபெறவிருக்கிறது.
S~400 Triumf

S~400 Triumf

இந்தியா- ரஷ்யா  இடையிலான 19வது ஆண்டுக் கூட்டம் டெல்லியில் அக்டோபர் 05ல்  நடைபெற்றுள்ளது.  இதில்    ரஷ்ய அதிபர்  புதின்  கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையே 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 8 ஒப்பந்தங்களில் மிகவும் முக்கியமானது, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா S-400 Triumf  ரக அதிநவீன வான்வெளி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவதாகும், இந்த ஏவுகணைகளை ரூ.37 ஆயிரம் கோடி செலவில் இந்தியா வாங்குகிறது. S-400 Triumf ரக ஏவுகணை எதிரி நாட்டு விமானங்களை சுட்டு வீழ்த்த பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏவுகணை கருவியில் நான்கு விதமான ஏவுகணைகள் பொறுத்தப்பட்டிருக்கும்.  அவை, 400, 250, 120, 40 கி.மீ தூரம் சென்று தாக்கக்கூடிய திறன் படைத்தவை. இந்த ஏவுகணை சிஸ்டத்தில் ஒரு யூனிட்டில் 8 லாஞ்சர்கள், 112 ஏவுகணைகள், ஒரு கட்டுப்பாட்டு மையம் மற்றும் வாகனங்கள் இடம் பெற்றிருக்கும்.
error: Content is protected !!