நியமனம்

தலைமை விஞ்ஞானி

தலைமை விஞ்ஞானி

இந்தியாவின் முதுபெரும் வேளாண் விஞ்ஞானியும் பசுமை புரட்சியின் தந்தை என அறியப்படுபவருமான    எம்.எஸ். சுவாமிநாதனின் மகள் டாக்டர். சவுமியா சுவாமிநாதன் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டுள்ளார். காசநோய் ஆராய்ச்சியாளரான இவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பணியாற்றினார். தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் திட்டங்களுக்கான துணை இயக்குநராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். தற்போது பதவி உயர்வு அளிக்கப்பட்டு அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  
ISI தலைவர்

ISI தலைவர்

பாகிஸ்தான் உளவுத்துறை தலைவராக ( ISI ) லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பாக ராணுவ உளவுப்பிரிவில் தலைவராக பணியாற்றி வந்தார். சமீபத்தில்தான் இவருக்கு லெப்டினன்ட் ஜெனரல் அந்தஸ்தை ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா தலைமையிலான ராணுவ பதவி உயர்வு வாரியம் வழங்கியது. இவர் வடக்கு பிராந்திய ராணுவ தளபதி பதவியிலும் இருந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இவருக்கு ‘ஹிலால் இ இம்தியாஸ்’ என்ற பாகிஸ்தானின் இரண்டாவது உயர்ந்த தேசிய விருது வழங்கப்பட்டது.
புதிய சொலிசிட்டர் ஜெனரல்

புதிய சொலிசிட்டர் ஜெனரல்

சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் தலைமை வக்கீல்கள் வரிசையில் அட்டார்னி ஜெனரலுக்கு அடுத்தபடியாக சொலிசிட்டர் ஜெனரல் பதவி உள்ளது. தற்போது இந்த பதவிக்கு, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக உள்ள துஷார் மேத்தா நியமிக்கப்பட்டு உள்ளார்.
வங்கி தலைவர்கள் நியமனம்

வங்கி தலைவர்கள் நியமனம்

சென்­னையை தலை­மை­யி­ட­மாக கொண்டு செயல்­படும், இந்­தி­யன் வங்­கி­யின் நிர்­வாக இயக்­கு­னர் மற்றும் தலைமை செயல் அதி­கா­ரி­யாக, பத்­மஜா சந்­துரு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். சிண்­டி­கேட் வங்­கி­யின் நிர்­வாக இயக்­கு­னர் மற்­றும் தலைமை செயல் அதி­கா­ரி­யாக மிருத்­யுன்­ஜய் மகா­பத்ரா  நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.
இந்திய பிரதிநிதி நியமனம்

இந்திய பிரதிநிதி நியமனம்

United Nations Conference on Disarmament in Geneva ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. ஆயுதக் குறைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்கான இந்திய பிரதிநிதியாக பங்கஜ் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
IDBI வங்கி தலைவர் நியமனம்

IDBI வங்கி தலைவர் நியமனம்

IDBI வங்கியின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக மூத்த வங்கியாளர் ராகேஷ் சர்மாவை அரசு நியமித்துள்ளது. இவர் ஆறு மாதகாலத்துக்கு இந்தப் பொறுப்பில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
IL and FS

IL and FS

பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்திவரும் IL & FS ( Infrastructure Leasing & Financial Services Ltd ) நிறுவனம் திவாலாகும் சூழ்நிலையில் இருப்பதால், அந்நிறுவனத்தை மத்திய அரசு கைப்பற்றியுள்ளது. IL & FS நிறுவனத்தை நிர்வகிக்க  உதய் கோடக் தலைமையில் ஆறு பேர் கொண்ட புதியஇயக்குநர் குழுவை அரசு  அமைத்துள்ளது. முன்னாள் ஐசிஐசிஐ வங்கித்தலைவர் ஜி.சி சதுர்வேதி, முன்னாள்ஐஏஎஸ் அதிகாரியும், டெக் மஹிந்திரா தலைவருமான வினித் நய்யார், முன்னாள் செபி தலைவர் ஜி.என்.பாஜ்பேய், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் மாலினி சங்கர், நந்தா கிஷோர் ஆகியோர் இயக்குநர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனத்தின் விவகாரத்தில் அரசு உடனடியாக  நடவடிக்கை எடுப்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன் 2009ல், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் விவகாரத்தில் அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்தது க
வங்கி தலைவராக பெண்

வங்கி தலைவராக பெண்

சௌதி அரேபியாவின் வரலாற்றில் முதல்முறையாக வங்கியொன்றின் தலைவராக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதுள்ள சௌதி பிரிட்டிஷ் பேங்க் மற்றும் அலவ்வால் பேங்க் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய வங்கியின் தலைவராக சௌதி அரேபியாவின் பிரபல பெண் தொழிலதிபர் லுப்னா அல் ஒலயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
error: Content is protected !!