நல்லெண்ண தூதர்கள்

UNDP Ambassador

UNDP Ambassador

ஐ.நா. வளர்ச்சித்திட்டத்தின் (யு.என்.டி.பி.) நல்லெண்ண தூதராக  அமெரிக்க இந்திய நடிகை, மாடல் அழகி, சமையல் கலை வல்லுனர், டி.வி. நட்சத்திரம், எழுத்தாளர் என பல முகங்களை கொண்ட  பத்மலட்சுமி  நியமிக்கப்பட்டுள்ளார்.
மராத்தான் தூதர்

மராத்தான் தூதர்

Delhi Half Marathon Ambassador  அக்டோபர் 21ல் புதுடெல்லியில் நடைபெறவுள்ள பாதி மராத்தான் போட்டியின்  நல்லெண்ண தூதராக, ஒலிம்பிக்கில் 4 முறை தங்கப்பதக்கம் வென்றுள்ள சான்யா ரிச்சர்ட்ஸ் ராஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் தலைவாஸ் தூதர்

தமிழ் தலைவாஸ் தூதர்

தமிழகத்தில் நடைபெறும் ப்ரோ கபடி போட்டிகளின் தூதுவராக நடிகர் விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளார். 6ஆவது சீஸன் ப்ரோ கபடி போட்டிகள் வரும் அக்டோபர் 5ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. ரசிகர்களை கவரும் வகையிலும், போட்டிகளை பிரபலப்படுத்தவும் தூதுவராக நடிகர் விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்த் தலைவாஸ் அணி மோதும் ஆட்டங்களில் விஜய் சேதுபதி பங்கேற்று ஊக்கப்படுத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போதை பொருள் ஒழிப்பு தூதுவர்

போதை பொருள் ஒழிப்பு தூதுவர்

உத்தராகண்ட், டெல்லி, சண்டிகர் மற்றும் இமாச்சல பிரதேசம், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் போதை பொருள் ஒழிப்பு தூதுவராக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நியமிக்கப்படவுள்ளார்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தூதர்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தூதர்

மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார தூதராக பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ரவீனா டாண்டன்

ரவீனா டாண்டன்

மும்பையில் அமைந்துள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் ( SGNP ) நல்லெண்ண தூதராக பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  
வர்த்தக தூதர்

வர்த்தக தூதர்

ரிலையன்ஸ் டிரெண்ட்ஸின் ( Reliance Trends ) தென்னிந்திய வர்த்தக  தூதுவராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிளாஸ்டிக் மாசில்லா  தமிழ்நாடு

பிளாஸ்டிக் மாசில்லா  தமிழ்நாடு

தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தி பிளாஸ்டிக் மாசில்லா  தமிழ்நாடு என்ற பிரச்சார குறும்படம், இணையதளம், செயலி மற்றும் இலச்சினை ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். பிளாஸ்டிக் மாசில்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான விளம்பரத் தூதர்களாக நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா  ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
விளம்பர தூதரான ஹனான்

விளம்பர தூதரான ஹனான்

கேரள அரசின் காதி வாரியத்தின் விளம்பர தூதராக ஹனான் ஹமீத்  நியமிக்கப்பட்டுள்ளார். கொச்சியை சேர்ந்த ஹனான் ஹமீத்  மூவாற்றுப்புழாவில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இதனால் கல்லூரி படிப்பு செலவிற்காக மாலை நேரங்களில் கொச்சியில் ஒரு சந்தையில் மீன் விற்பனை செய்து வருகிறார்.
error: Content is protected !!