திட்டங்கள்

ரூ 2000 நிதியுதவி

ரூ 2000 நிதியுதவி

கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 04/03/2019 அன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப்பெறுவார்கள். அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
மாநில உணவு பாதுகாப்பு திட்டம்

மாநில உணவு பாதுகாப்பு திட்டம்

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் { National Food Security Act - NFSA } விடுபட்டுப்போன 25 லட்சம் ஏழைகளுக்காக மாநில உணவு பாதுகாப்பு திட்டத்தை ( State Food Security Scheme - SFSS) ஒடிஷா மாநில முதல்வர் அறிமுகம் செய்துள்ளார்.  இத்திட்டத்தின்படி  நபர் ஒருவருக்கு ரூபாய் 1 விலையில் 5 கிலோ அரிசி ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும்.
பென்ஷன் திட்டம்

பென்ஷன் திட்டம்

அக்டோபர் 02/2018 அன்று மகாத்மா காந்தி பிறந்த தினத்தில் Swahid Kushal Konwar Sarbajanin Briddha Pension Achoni என்ற பெயரில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை அஸ்ஸாம் முதல்வர் துவக்கி வைத்துள்ளார்.
வங்கதேச திட்டங்கள்

வங்கதேச திட்டங்கள்

வங்கதேசத்தின் பெரமாரா - இந்தியாவின் பகராம்பூர் இடையேயுள்ள மின்தொடர் முறை மூலம் இந்தியாவிலிருந்து வங்காளதேசத்திற்கு கூடுதலாக 500 மெகாவாட் மின்சார விநியோகம் செய்வது, வங்காளதேசத்தின் அக்குஹாரா பகுதியை திரிபுரா மாநிலத்தின் அகர்தாலா நகருடன் இணைக்கும் இரட்டை வழித்தட ரெயில் பாதை அமைக்கும் பணியையும் வங்கதேச ரயில்வேயின் குலாரா ஷாபாஸ்பூர் ரயில் பாதை ஆகிய 3 திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி, வங்காளதேச  பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வர் மம்தா  பானர்ஜி, திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் ஆகியோர்  காணொலி காட்சி மூலம்  கூட்டாக தொடங்கி வைத்தனர்.
ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டம்

ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டம்

நாட்டில் 50 கோடி மக்கள்  ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறும் உலகிலேயே மிகப்பெரிய மருத்துவத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டம்,  பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்தநாளான செப்டம்பர் 25ம் தேதி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி சுதந்திரதின உரையில்  அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தில் நாட்டில் கிராமப்பகுதிகளில் உள்ள 8.03 கோடி மக்களும், நகர்ப்புறங்களில் உள்ள 2.33 கோடி குடும்பங்களும் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டத்தை ஏற்று நடைமுறைப்படுத்த 22 மாநில அரசுகள் முன்வந்துள்ளனர். இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
மகளிர் சக்தி மையம்

மகளிர் சக்தி மையம்

கிராமப் பெண்களுக்கு அதிகாரமளிக்க வகை செய்யும் மகளிர் சக்தி மையம் (Mahila Shakti Kendra) என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டம் 2017-18ம் ஆண்டு முதல் 20189-20ம் ஆண்டு வரையில் செயல்பாட்டில் இருக்கும். சமுதாயப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு மத்திய அரசின் 60 சதவீத நிதியும் மாநில அரசுகளின் 40 சதவீத நிதியும் ஒதுக்கப்படும். வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரையில் மத்திய அரசு 90 சதவீத நிதியும் மாநிலங்கள் 10 சதவீத நிதியையும் ஒதுக்கும். இத்திட்டத்தின் கீழ் பெண்கள் குறித்த பல்வேறு விவகாரங்களில் அந்தந்த அரசுகளுக்கு தேசிய அளவிலும் மாநில அளவிலும் தொழில்நுட்ப ஆதரவு அளிக்கப்படும்.
Solar Charkha Mission

Solar Charkha Mission

ஜூன் 27 --- உலக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தினம் ( World  Micro Small and Medium Enterprises Day ) இதனை முன்னிட்டு  உத்யம் சங்கம் ( Udyam Sangam 2018 -- National MSME Conclave ) என்ற மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் Solar Charkha Mission ஐ துவக்கி வைத்துள்ளார். இதன்மூலம் 50 தொழிற்குழுமங்கள் வாயிலாக தலா 400 முதல் 2000  கைத்தொழில் கலைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதாகும்.  மேலும்  குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்துக்கென புதிய இணையதளத்தை (உதயம் சஹி) தொடங்கி வைத்தார்.
7 நட்சத்திர வானவில் பஞ்சாயத்து

7 நட்சத்திர வானவில் பஞ்சாயத்து

7 Star Gram Panchayat Rainbow Scheme 7 சமூக காரணிகள் அடிப்படையில் கிராமங்களுக்கு 7 நட்சத்திர குறியீடு வழங்கும் திட்டத்தை ஹரியானா மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. பாலின சமத்துவம், கல்வி, சுகாதாரம், குற்றம், சுற்றுச்சூழல், நல்ல நிர்வாகம் மற்றும் கிராம வளர்ச்சி ஆகியவற்றை கொண்டு நட்சத்திர குறியீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Swachh Iconic Places (SIP)

Swachh Iconic Places (SIP)

தூய்மை இந்தியா இயக்கத்தின் மூன்றாம் கட்டமாக, தூய்மைச் சின்னங்கள் என்ற முன்னோடித் திட்டத்தில் ( Swachh Iconic Places  - SIP ), ராகவேந்திர சுவாமி கோவில் (கர்னூல், ஆந்திரபிரதேசம்),  ஹசர்துவாரி அரண்மனை (முர்ஷிதாபாத், மேற்குவங்கம்), பிரம்ம சரோவர் கோவில் (குருஷேத்ரா, ஹரியானா), விதுர்குடி (பிஜ்னோர், உத்தரப்பிரதேசம்), மனா கிராமம் (சமோலி, உத்ரகாண்ட்), பேங்காங் ஏரி (லே-லடாக், ஜம்மு&கஷ்மீர்), நாக வாசுகி கோவில் (அலகாபாத், உத்தரபிரதேசம்), இமாகேத்தால்/ சந்தை (இம்பால், மணிப்பூர்), சபரிமலை கோவில் (கேரளா) மற்றும் கன்வாஷ்ரம் (உத்ரகாண்ட்) ஆகிய 10 முக்கியத் தலங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.  
Prakritik Kheti Khushhaal Kissan Yojana

Prakritik Kheti Khushhaal Kissan Yojana

இமாச்சல பிரதேச மாநில அரசானது பூஜ்ஜிய பட்ஜெட் இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவதற்காக (Zero Budget Natural Farming System) பிராகிரிதிக் கேத்தி குஷால் கிஷான் யோஜனா (Prakritik Kheti Khushhaal Kissan Yojana) எனும் திட்டத்தை துவங்கியுள்ளது.
error: Content is protected !!