தமிழ்நாடு

World Womens Day

World Womens Day

மார்ச் 08 - உலக பெண்கள் தினம் சர்வதேச அளவில் பாலின சமத்துவம் எட்டப்பட வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டுக்கான மையக்கருத்தாக #BalanceForBetter என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வளமான எதிர்காலத்துக்கு பாலின சமத்துவம் என்பதே இதன் பொருள். உலக மகளிர் தினத்தை ஒட்டி சென்னை பெருநகர போலீஸ் ஒரு வீடியோவை உருவாக்கியுள்ளது.  #BalanceForBetter என்ற ஹேஷ்டேகின் கீழ் அது பகிரப்பட்டுள்ளது.
விலையில்லா உணவு

விலையில்லா உணவு

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் கே. பழனிசாமி 04/03/2019ல் தொடங்கி வைத்தார்.
ரூ 2000 நிதியுதவி

ரூ 2000 நிதியுதவி

கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 04/03/2019 அன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப்பெறுவார்கள். அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இ அடங்கல் செயலி

இ அடங்கல் செயலி

பயிர் சாகுபடி நடைபெறும் விவசாய நிலங்களை பதிவு செய்யும் முறையை எளிமைப்படுத்தும் நோக்கில் வருவாய்த்துறை சார்பில் இ அடங்கல் கைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருவாய்த் துறையின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், கையால் எழுதப்படும் நிலையை மாற்றவும் தகவல் மேலாண்மை அமைப்பு மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, TNSMART செயலி ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், வெப்பசலனம், வெப்பக்காற்று எச்சரிக்கைகளை பெறும் வசதியும் தற்போது அளிக்கப்பட்டுள்ளது.
Kavalar Angadi App

Kavalar Angadi App

போலீஸ் கேண்டீனில் உள்ள பொருட்களின் இருப்பை அறிந்து கொள்ள காவலர் அங்காடி ( Kavalar Angadi App ) செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அம்மா சமுதாய வானொலி

அம்மா சமுதாய வானொலி

தமிழக அரசின் சார்பில், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், மக்கள் நலத் திட்டங்கள், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள்,  மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச் சத்து திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்கள் குறித்த தகவல்களை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ள அம்மா சமுதாய வானொலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சேவையைப் பெற, மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் தங்களது செல்லிடப்பேசி எண்களைப் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்த எண்கள் மூலமாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்களது செல்லிடப்பேசிகளில் இ-மதி செயலியைப் பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக அம்மா சமுதாய வானொ
புதிய ஜவுளிக் கொள்கை 2019

புதிய ஜவுளிக் கொள்கை 2019

தமிழக அரசின்  சார்பில்  புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை - 2019 வெளியிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள நூற்பாலைகளில் 15 ஆண்டுகளுக்கு முந்தைய இயந்திரங்களின் தொழில்நுட்ப மேம்பாடு, நவீனப்படுத்தலுக்கான முதலீடுகளின் மீது 2 சதவீத வட்டி மானியம், தொடக்க கைத்தறி நெசவாளர் சங்கங்களுக்கான வட்டி மானியம் 4 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்தி வழங்குதல், கைத்தறி ரகங்களுக்கான தள்ளுபடி மானியத் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை ஆண்டுக்கு ரூ.80 கோடியில் இருந்து ரூ.150 கோடியாக உயர்த்தி வழங்குதல் ஆகிய சலுகைகள் இந்த ஜவுளிக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் புத்தம் புதிய நாடா இல்லா விசைத்தறி வாங்குதலில் செய்யப்படும் முதலீடுகளின் மீது மத்திய அரசால் வழங்கப்படும் மானியத்துடன், மாநில அரசால் கூடுதலாக 10 சதவீதம் மானியம் வழங்கப்படும். தறி ஒன்று
சி விஜில்  செயலி

சி விஜில் செயலி

2019 மக்களவை தேர்தலில் விதிமீறல் உள்ளிட்ட புகார்கள் இருந்தால் பொதுமக்கள், சி விஜில் (C Vigil) எனும் செயலியின் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி --  சத்யபிரத சாகு
ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு

ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு

ஈரோடு மஞ்சள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இதற்குமுன் மகாராஷ்டிரா மாநில வைகான் மஞ்சள், ஒடிசா கந்தமால் மலை மஞ்சள் ஆகியவை புவிசார் குறியீடு பெற்றுள்ளன. ஈரோடு மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருளின் அளவு அதிகம் உள்ளது. இதனால், மஞ்சளின் நிறம், சுவை, மணம் வேறுபட்டதாக இருக்கும். மேலும், பல்வேறு மருத்துவ குணம் உள்ளதால், இயற்கை மருத்துவம், சித்தா மருத்துவத்தில் பலவித நோய்களுக்கு மருந்து தயாரிக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஈரோடு மண்ணின் தன்மையை கொண்டு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் காங்கேயம், அன்னூர், தொண்டாமுத்தூர் போன்ற பகுதிகளில் விளையும் மஞ்சளுக்கு ஈரோடு மஞ்சள் என்ற பெயர் பொருந்தும். ஈரோடு விதை மஞ்சளை பிற பகுதியினர் வாங்கிச் சென்று விதைத்தாலும் அதை ஈரோடு மஞ்சளாக கருத முடியாது என புவிசார் குறியீடு பதிவகம் அறிவித்த
error: Content is protected !!