குழு

விருது தேர்வுக்குழு

விருது தேர்வுக்குழு

2018ம் ஆண்டுக்கான தயான்சந்த் மற்றும் துரோணாச்சாரியா விருது பெற்றவர்களை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட 11 நபர் குழுவின் தலைவர்  ==   முன்னாள் பஞ்சாப் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி முகுல் முத்கல் 
குழு

குழு

தொழில்முறை போட்டி சட்டங்களை சீராய்வு செய்ய, நிறுவனங்கள் விவகார துறை செயலாளர் இஞ்ஜெட்டி ஶ்ரீநிவாஸ் தலைமையில் 9 நபர்கள் குழுவினை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
ரூபாய் 50 லட்சம் நஷ்டஈடு

ரூபாய் 50 லட்சம் நஷ்டஈடு

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது கேரள காவல்துறை அதிகாரிகள் தவறான முறையில் திட்டமிட்டு வழக்கு பதிவு செய்தது உறுதியானதால் அவருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. மேலும், விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே ஜெயின் தலைமையில்  கமிட்டி  அமைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்த கமிட்டியில் மத்திய அரசு மற்றும் கேரள அரசு சார்பில் தலா ஒருவர் இடம் பெறுவர் என கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானி நம்பி நாராயணன் கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்களில் (cryogenic engine technology) முதன்மையானவராக செயல்பட்டவர். 1994ம் ஆண்டு பாதுகாப்பு ரகசியங்களை உளவுபார்த்ததாக மத்திய புலனாய்வுத்துறை தவறுதலாக இவரை கைது செய்தது. 1998ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அவர் நிரபராதி என்று தீப்பளித்த
ஸ்டெர்லைட்  ஆய்வு குழு

ஸ்டெர்லைட் ஆய்வு குழு

ஸ்டெர்லைட் ஆலை பற்றி ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி வசீப்தார் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. ஆனால் அவர் தலைமை பொறுப்பேற்க மறுத்து விட்டார். இதையடுத்து மேகாலய மாநில ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை விசாரிக்கும் குழுவின் தலைவராக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
கண்காணிப்பு குழு

கண்காணிப்பு குழு

சட்டவிரோத குடியேறியவர்களை கண்காணிக்க மாநில அளவிலான கண்காணிப்புக் குழு மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்களை  மணிப்பூர்  மாநிலம்  ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதி. ரகுபதி ராஜினாமா

நீதிபதி. ரகுபதி ராஜினாமா

புதிய தலைமைச் செயலக கட்டுமானத்தில் முறைகேடு நடந்ததாக கூறி, அது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ஆர்.ரகுபதி, தனது பதவியை ஆகஸ்டு 17ல் ராஜினாமா செய்துள்ளார்.
ஏவுதளம் அமைக்க குழு

ஏவுதளம் அமைக்க குழு

இஸ்ரோவின் ராக்கெட்களை ஏவுவதற்கு 3வது புதிய ஏவு தளம் அமைப்பது குறித்த சாத்தியங்களை ஆராய இஸ்ரோவின் விண்வெளித் துறை பேராசிரியர் நாராயணா தலைமையில் விஞ்ஞானிகள் அண்ணாமலை, அபேகுமார், கனங்கோ, சுதிர்குமார், சேஷகிரி ராவ், சோமநாத் ஆகிய 7 பேர்  கொண்ட  வல்லுநர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து செயற்கைக் கோள்களும் தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருக்கும் இரு ராக்கெட் ஏவுதளங்களில் இருந்தே விண்ணில் செலுத்தப்படுகின்றன. உலகிலேயே ராக்கெட் ஏவுவதற்கு மிக உகந்த இடம் பூமத்திய ரேகைக்கு 5 டிகிரியில் நெருக்கமான கோணத்தில் இருக்கும் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானா. அடுத்தபடியாக, ஸ்ரீஹரி கோட்டா ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு 13.43 டிகிரியில் இருக்கிறது.  தமிழகத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் 8 டிகிரியில் இருக்கிறது.
தருமபுரி இளவரசன் மரண விசாரணை

தருமபுரி இளவரசன் மரண விசாரணை

தருமபுரி இளவரசன் மரணத்தில் உண்மை நிலவரம் குறித்து ஆராய 2013 ஜூலை 08ல் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். ஆர்.  சிங்காராவேலு ஆணையம், தனது அறிக்கையை 2018 ஆகஸ்டு 20ல் தாக்கல் செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆராய குழு

ஸ்டெர்லைட் ஆராய குழு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையையும் அதனால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து அப்பகுதியை ஆய்வு செய்யவும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம்  உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த குழுவில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்  எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போது ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவுக்கு, பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜே. வஜீஃப்தாரை  தலைவராக நியமித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் - நீதிபதி ஏ. கே. கோயல்  
Vishaka Committee

Vishaka Committee

தமிழக காவல்துறையின் விசாகா கமிட்டியின் தலைவராக கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் மற்றும்  கூடுதல் டிஜிபி அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி, ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்பி சரஸ்வதி, டிஜிபி அலுவலக சீனியர் நிர்வாக அலுவலர் ரமேஷ் ஆகியோரை உறுப்பினர்களாக நியமித்து தமிழக DGP  டி. கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். விசாகா கமிட்டியின் வரலாறு :  1990ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்திய அரசு ஊழியரான பன்வாரிதேவி என்ற பெண், பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த பெண்ணின் கொலைக்கு நியாயம் கேட்டு, ராஜஸ்தானை சேர்ந்த ‘விசாகா’ என்ற மகளிர் அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றனர். அதை அடிப்படையாக வைத்து பெண்கள் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை விசாரிக்க ‘விசாகா குழு’ அமைக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அன
error: Content is protected !!