உலகம்

Quintero One

Quintero One

உலகின் முதல் ‘ஹைப்பர்லூப் பயணிகள் கேப்ஸ்யூலை’ அமெரிக்காவின் ஹைப்பர்லூப் போக்குவரத்துத் தொழில்நுட்ப நிறுவனம் ஸ்பெயினில் அக்டோபர் 3 அன்று அறிமுகம் செய்திருக்கிறது. 2019-ம் ஆண்டிலிருந்து இந்த கேப்ஸ்யூல் பயன்பாட்டுக்கு வரும் என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ‘குவின்டெரோ ஒன்’ ( Quintero One ) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த கேப்ஸ்யூல் ஒருமணி நேரத்தில் 700 மைல்களைக் கடக்கும் வேகத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இண்டர்போல் தலைவர் ராஜினாமா

இண்டர்போல் தலைவர் ராஜினாமா

இண்டர்போல் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக மெங் ஹாங்வே அறிவித்துள்ளார். சீனாவைச் சேர்ந்த இவரை கடந்த ஒரு மாதமாக காணவில்லை என அவரின் மனைவி புகார் அளித்துள்ளார். இண்டர்போல் அமைப்பின் தலைமையகமானது பிரான்ஸின் லியான் நகரில் அமைந்துள்ளது. அங்குதான் ஹாங்வே தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து தனது கணவரைக் காணவில்லை என்று அவரது மனைவி புகார் தெரிவித்திருந்தார்.
ஒடுக்கப்படும் மனித உரிமை குழுக்கள்

ஒடுக்கப்படும் மனித உரிமை குழுக்கள்

இந்தியா, சீனா, ரஷ்யா, மியான்மர் போன்ற நாடுகள் மனித உரிமைக் குழுக்களையும் செயல்பாட்டாளர்களையும் கடுமையாக ஒடுக்குவதாக செப்டம்பர் 12 அன்று வெளியான ஐ.நா அறிக்கை தெரிவிக்கிறது. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகக் குரல் கொடுப்பவர்கள் கொலை, சித்திரவதை, தன்னிச்சையான கைது போன்றவற்றால் பாதிக்கப்படுவதாக ஐ.நா. பொதுச் செயலாளரின் ஒன்பதாவது ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. சட்ட, அரசியல், நிர்வாகத் தடைகள் விதிக்கப்பட்டு மனித உரிமைப் பாதுகாவலர்கள் மிரட்டப்படுகின்றனர் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.
அழிந்துவரும் சதுப்புநிலங்கள்

அழிந்துவரும் சதுப்புநிலங்கள்

உலகுக்கு நன்னீரை மறைமுகமாகவும் நேரடியாகவும் வழங்கிவரும் சதுப்புநிலங்கள்,  காடுகளைவிட மூன்று மடங்கு வேகமாக அழிந்துவருவதாக உலகளாவிய சதுப்புநில அமைப்பான ‘Global Wetland Outlook’ செப்டம்பர் 27 அன்று தெரிவித்தது. கடந்த 45 ஆண்டுகளில் (1970-2015), உலகின் 35 சதவீத சதுப்புநிலங்கள் அழிந்துவிட்டதாக இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் 1.21 கோடி சதுர கிலோமீட்டர் அளவில் சதுப்பு நிலப் பகுதிகள் இருக்கின்றன.
உலகின் மிகப் பெரிய பறவை

உலகின் மிகப் பெரிய பறவை

உலகின் மிகப் பெரிய பறவை யானைப் பறவைதான் (Vorombe Titan) என்று பிரிட்டனைச் செய்த விஞ்ஞானிகள் செப்டம்பர் 26 அன்று தெரிவித்தனர். யானைப் பறவை பற்றி அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், அது ஒரு வளர்ந்த ஒட்டகச்சிவிங்கியின் எடையைப் போல 860 கிலோ எடையுடன் இருந்ததாகக் கணித்திருக்கின்றனர். மடகாஸ்கரில் வாழ்ந்துவந்த இந்தப் பறவைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டன.
சுனாமி

சுனாமி

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் செப்டம்பர் 27ல் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியதில் பலு நகரில் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலு நகருக்கு அருகே உள்ள டொங்காலா மற்றும் மமுஜு நகரங்களையும் சுனாமி தாக்கியது.
Hepatitis E Virus

Hepatitis E Virus

உலகிலேயே முதன்முறையாக, எலியின் கழிவு கலந்த உணவை  உட்கொண்டதன் மூலம், ஹாங்காங்கைச் சேர்ந்த நபர்  ஹெபடைடிஸ் ஈ வைரஸ் ( HEV ) பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார். இவரது கல்லீரல் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். எலியின் கழிவு மூலமாகவும் மனிதருக்கு ‘ஹெபடைடிஸ் ஈ’ வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்பது நிரூபணமாகியிருக்கிறது.
The Knotted Gun

The Knotted Gun

சர்வதேச வன்முறை எதிர்ப்பு தினத்தை ( காந்தி பிறந்தநாள் ) முன்னிட்டு ஐ.நா. தபால் துறை சார்பில் The Knotted Gun என்ற தலைப்பில் தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது.
USMCA

USMCA

North American Free Trade Agreement (NAFTA) The United States-Mexico-Canada Agreement (USMCA) அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிடையே தடையில்லா வர்த்தகம் மூலம் பொருளாதார வளர்ச்சி பெறுவதற்காக கடந்த 1994ம் ஆண்டு ‘வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்’ (NAFTA)  ஏற்படுத்தப்பட்டது. தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் NAFTA ஒப்பந்தம், அமெரிக்கா நலன்களுக்கு எதிராக இருப்பதாக கூறி இதனை ஏற்க மறுத்து விட்டார். தற்போது அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா இடையில் புதிய வடிவிலான வர்த்தக ஒப்பந்தம் USMCA ஏற்படுத்தப்பட்டுள்ளது.
செயற்கை கருத்தரிப்பு

செயற்கை கருத்தரிப்பு

தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் பிரிடோரியாவில் உள்ள பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பெண் சிங்கத்துக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்து  சாதனை செய்துள்ளனர். தற்போது  அந்த பெண் சிங்கம்  இரண்டு  சிங்க குட்டிகளை ஈன்றுள்ளது.
error: Content is protected !!