இறப்பு

ஜி.டி. அகர்வால் மரணம்

ஜி.டி. அகர்வால் மரணம்

கங்கை நதியை சுத்தப்படுத்த வலியுறுத்தி ஜூன் 22 முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த சமூக ஆர்வலர் ஜி.டி. அகர்வால் இன்று  (அக்டோபர் 11) காலமானார்.
நாகாலாந்தின் காந்தி மரணம்

நாகாலாந்தின் காந்தி மரணம்

நாகாலாந்தின் காந்தி என்று புகழப்பட்ட காந்தியவாதியான நட்வர் தக்கர் உடல்நலக் குறைவால்  காலமானார். மஹாராஷ்டிரா மாநிலத்தின் தஹானு பகுதியில் பிறந்தவரான நட்வர் தக்கர் காந்தியக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடுள்ளவர். அவற்றைப் பரப்புவதையே தனது வாழ்நாள் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வந்தவர். 1955ம் ஆண்டு தனது வேலை நிமித்தம் நாகாலாந்தின் சுச்சுயும்லங் பகுதிக்கு வந்தவர், தொடர்ந்து அப்பிராந்திய மக்களின் மேம்பாட்டிற்காக தன்னை அர்பணித்துக் கொண்டு செயல்பட்டு வந்தார். நாகா பிரிவினைவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்த அந்த காலகட்டத்தில் தொடர்ந்த அவரது காந்திய நோக்கிலான செயல்பாடுகளின் மூலம் மக்களின் நற்பெயரைப் பெற்றார் அத்துடன் அவருக்கு 'நாகாலாந்தின் காந்தி' என்ற அடைமொழி அவருக்கு வழங்கப்பட்டது. அத்துடன் அவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
கி.த. ப. மறைவு

கி.த. ப. மறைவு

முதுபெரும் தமிழறிஞரும் சுதந்திரப் போராட்ட வீரருமான கி.த. பச்சையப்பன் மாரடைப்பால் சென்னையில் செப்டம்பர் 20 அன்று காலமானார். புதுச்சேரியில் பிறந்த இவர், தன் இளம்வயதிலேயே பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரி விடுதலை பெற வேண்டும் எனப் போராடியவர். சென்னையின் அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றி, தலைமை ஆசிரியராக ஓய்வுபெற்றவர். தமிழகத்தின் தமிழாசிரியர் கழகத் தலைவர், சென்னை ஆசிரியர் சங்கத் தலைவர், தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் தலைவர் போன்ற பொறுப்புகளை வகித்திருக்கிறார். இவர் தன் வாழ்க்கையில் 70 ஆண்டுகளைப் பொது வாழ்க்கைக்காக அர்ப்பணித்துள்ளார்.
நோபல் பரிசு பெற்றவர் மரணம்

நோபல் பரிசு பெற்றவர் மரணம்

கடவுளின் துகள் (GodParticle)  கண்டுபிடித்த அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான இயற்பியல் விஞ்ஞானி லியோன் லெடர்மேன் காலமானார். இவர் ‘முவான் நியுட்ரினோ’ கண்டுபிடிப்புக்காக, வேறு 2 விஞ்ஞானிகளுடன் இணைந்து 1988ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுள்ளார்.
நவாஸ் மனைவி மரணம்

நவாஸ் மனைவி மரணம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் மனைவி குல்சும் நவாஸ் உடல்நலக்குறைவு காரணமாக  உயிரிழந்தார். ( செப்டம்பர் 11 )
சமண துறவி காலமானர்

சமண துறவி காலமானர்

சமண மதத் துறவி தருண் சாகர் மஹாராஜ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மத்திய பிரதேச மாநிலம் தோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் தருண் சாகர் மஹாராஜ். இவரது இயற்பெயர் பவன் குமார் ஜெயின்.
நடிகர்கள் மறைவு

நடிகர்கள் மறைவு

வெள்ளை சுப்பையா கோவை செந்தில் ராக்கெட் ராமநாதன் சிறு சிறு வேடங்களில் நம்மை மகிழ்வித்த திரைக்கலைஞர்களான மேற்கண்ட மூவரும் ஒரு சில நாட்கள் இடைவெளிகளில் காலமானார்கள்.
முன்னாள் அமைச்சர் மரணம்

முன்னாள் அமைச்சர் மரணம்

முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் 1991 - 96ல் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், வடகரையை சேர்ந்தவர் நாகூர் மீரான். தனது 27 வயதில் அமைச்சராக பொறுப்பேற்றவர் இவர்.  
NTR மகன் மரணம்

NTR மகன் மரணம்

ஆந்திர முன்னாள் முதல்வர் என். டி ராமாராவின் மகனும், தெலுங்கு நடிகர் ஜூனியர் என். டி. ஆரின் தந்தையுமான ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் இன்று ( ஆகஸ்டு 29) உயிரிழந்தார்.
error: Content is protected !!