இந்தியா

அவசர சட்டம்

அவசர சட்டம்

வங்கிக் கணக்கு தொடங்கவும், செல்போன் சிம் கார்டு வாங்கவும் தாமாக முன்வந்து ஆதாரைப் பயன்படுத்த அனுமதிக்கும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த ஒப்புதல் வழங்கி உள்ளார். இதன்படி, வங்கிக் கணக்கு தொடங்கவும் செல்போன் சிம் கார்டு வாங்கவும் அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை வழங்க வாடிக்கையாளர்கள் தாமாக முன்வந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஆதார் எண்ணை கட்டாயமாக கேட்கக்கூடாது. அதேநேரம் தனியார் நிறுவனங்கள் ஆதார் முக்கிய தகவல்களை சேமிக்கக் கூடாது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு அதிகபட்சம் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.
மத்தியஸ்த குழு

மத்தியஸ்த குழு

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தீர்வு காண்பதற்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்த  குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர்  இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். மத்தியஸ்த குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்  ஆவார்கள்.
20 ரூபாய் நாணயம்

20 ரூபாய் நாணயம்

மத்திய அரசு 20 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது. இது 12 முனைகளைக் கொண்டதாக (பாலிகோன் – பல கோணங்கள்) வடிவமைக்கப்பட்டுள்ளது. 20 ரூபாய் நாணயம் 8.54 கிராம் எடை கொண்டதாகவும், 27 மி.மீ. வட்டம் உடையதாகவும் இருக்கும். வெளி வட்டப் பகுதியானது நிக்கல் சில்வரால் ஆனது. மையப் பகுதி நிக்கல் பித்தளையால் ஆனது. ஏறக்குறைய 10 ரூபாய் நாணயத்தைப் போலவே இது இருக்கும். முகப்பில் சிங்க முகம் கொண்ட அசோக ஸ்தூபி இடம்பெறும். அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்ற வாசகம் இடம்பெறும். ஒரு பக்கம் பாரத் என ஹிந்தியிலும் மறு பக்கம் இந்தியா என ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். பின்பகுதியில் 20 என நாணயத்தின் மதிப்பு பெரிதாக ரூபாய் குறியீட்டுடன் இருக்கும்.
ஒப்பந்தம்

ஒப்பந்தம்

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடமாகாண மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும், உற்பத்தியை அதிகரிப்பதற்கும், வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும்,  யாழ்ப்பாணம் நகரில் இந்தியாவின் உதவியுடன் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்தானது. இலங்கைக்கான இந்தியத் தூதர் தரண்ஜித் சிங் சாந்து மற்றும் இலங்கைக்கான சர்வதேச வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் கொடிகாரா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.  
வரி குறைப்பு

வரி குறைப்பு

பெட்ரோலிய பொருட்கள் விலை அதிகரித்து வரும் நிலையில், விமான எரிபொருள் மீதான உற்பத்தி வரியை 14 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. ( அக்டோபர் 10 )
சீக்கிய பெண்களுக்கு விதிவிலக்கு

சீக்கிய பெண்களுக்கு விதிவிலக்கு

சண்டிகார் யூனியன் பிரதேசத்தில்  உள்ள சீக்கிய பெண்கள் ஹெல்மெட் அணிவதற்கு விதிவிலக்கு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே டெல்லியில் சீக்கிய பெண்களுக்கு ஹெல்மெட் அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மின் வழிக் கட்டணம்

மின் வழிக் கட்டணம்

உலக அளவில் மின் வழிக் கட்டணங்களை (e-Payments) நடைமுறைப் படுத்தும் அரசுகளில், 2018-ம் இந்திய அரசு 28வது இடத்தில் இருப்பதாக எகனாமிக் இன்டெலிஜென்ஸ் யூனிட் அக்டோபர் 3 அன்று தெரிவித்திருக்கிறது. 73 நாடுகள் இடம்பெற்றிருந்த ‘Government e-Payments Adoption Ranking’ என்ற தரவரிசைப் பட்டியலில் நார்வே அரசு முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.
தித்லி புயல்

தித்லி புயல்

வங்கக்கடலில் தித்லி ( Titli ) என்ற புயல் உருவாகி உள்ளது. ஏற்கனவே அரபிக்கடலில் லூபன்  புயல்  உருவாகியுள்ளது.
IMF Prediction

IMF Prediction

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி  நிகழாண்டில் 7.3 சதவீதமாகவும் அடுத்த ஆண்டு (2019) 7.4 சதவீதமாகவும் இருக்கும் என்று சர்வதேச நிதி ஆணையமான (ஐ.எம்.எப்) தெரிவித்துள்ளது.
Luban

Luban

அரபிக்கடலில் ஓமன் நாட்டிற்கருகே உருவாகியுள்ள புயலுக்கு லூபன் ( Luban ) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை ஓமன் வழங்கியுள்ள து.
error: Content is protected !!