அறிவியல்

அறிவியல்

Kavalar Angadi App

Kavalar Angadi App

போலீஸ் கேண்டீனில் உள்ள பொருட்களின் இருப்பை அறிந்து கொள்ள காவலர் அங்காடி ( Kavalar Angadi App ) செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் 18 திட்டங்கள்

இஸ்ரோவின் 18 திட்டங்கள்

இஸ்ரோ அடுத்த ஆறு மாதங்களில் பதினெட்டுத் திட்டங்களை நிறைவேற்றவிருப்பதாக இஸ்ரோ தலைவர் கே. சிவன் செப்டம்பர் 16 அன்று தெரிவித்தார். இரண்டு வாரங்களுக்கு ஒரு திட்டம் வீதம் ஆறு மாதங்களில் 18 திட்டங்களை நிறைவேற்றத் திட்டமிட்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த செயற்கைக்கோள் நிறுவனத்தின் பூமியைக் கவனிக்கும் நோவாஎஸ்ஏஆர் (NovaSAR), எஸ்1-4 என்ற இரண்டு செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி.-சி42 ஏவுகணையில் செப்டம்பர் 16 அன்று இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. வரும் ஆறு மாதங்களில், ஜிசாட்-11, சந்திரயான்-2 போன்ற முக்கியத் திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தி இருக்கிறது.
அறிவியல் திருவிழா

அறிவியல் திருவிழா

4th India International Science Festival  அக்டோபர் 05ல் லக்னோ நகரில் 4வது இந்தியா சர்வதேச அறிவியல் திருவிழா, ஜனாதிபதியால் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. கருப்பொருள்  --  Science for Transformation  
EYEROVTUNA

EYEROVTUNA

கொச்சியைச் சேர்ந்த EyeROV Technologies நிறுவனம், முதன்முதலில் வணிக ரீதியான  நீருக்கடியில் இயங்ககூடிய தானியங்கி ஆளில்லா  விமானத்தை EYEROVTUNA  உருவாக்கியுள்ளது. The first commercial Remotedly Operated Vehicle (ROV)/underwater drone, EYEROVTUNA, was developed by EyeROV Technologies, Kochin.
இளம் அறிஞர் விருது

இளம் அறிஞர் விருது

மதுரையைச் சேர்ந்த ராஜலட்சுமி நந்தகுமார் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். இவர் சாதாரண ஸ்மார்ட் போனை ‘சோனார்’ சாதனமாக மாற்றும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து உள்ளார். (சோனார் என்பது நீரில் மூழ்கிய பொருட்களை ஒலி அலைகளை கொண்டு கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் ஆகும்) இந்த கண்டுபிடிப்புக்காக ராஜலட்சுமி நந்தகுமாருக்கு, 2018-ம் ஆண்டுக்கு உரிய அமெரிக்காவின் புகழ் பெற்ற ‘மார்கோனி சொசைட்டி பால் இளம்அறிஞர் விருது’ கிடைத்து உள்ளது. இந்த விருது 5 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம்) ரொக்கப்பரிசைக் கொண்டது. ராஜலட்சுமி நந்தகுமார் கண்டுபிடித்து உள்ள தொழில் நுட்பத்தினால், உடல் ரீதியான செயல்பாடுகள், சுவாசம் போன்றவற்றை கண்டறிய முடியும், அதுவும் ஒருவரின் உடலை ‘சோனார்’ சாதனம் தொடாமலேயே கண்டுபிடிக்க முடியுமாம். இவரது கண்டுபிடிப
ஜெயன்ட் மெக்கல்லன் டெலஸ்கோப்

ஜெயன்ட் மெக்கல்லன் டெலஸ்கோப்

விண்வெளியை பல மடங்கு துல்லியமாகப் படம்பிடிக்கக்கூடிய உலகின் அதி நவீன தொலைநோக்கி சிலி நாட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. உலகின் மிகப் பெரிய தொலைநோக்கியாக அமையும் இந்த ஜெயன்ட் மெக்கல்லன் டெலஸ்கோப், வருகிற 2024ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
சர்வதேச விண்கல கண்காட்சி

சர்வதேச விண்கல கண்காட்சி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, இஸ்ரோ உதவியுடன், சி.ஐ.ஐ., எனும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் 'சர்வதேச விண்கல கண்காட்சி'யை, கர்நாடக மாநிலம், பெங்களூரில், இஸ்ரோ தலைவர், கே.சிவன் துவக்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரான்ஸ் நாட்டின் விண்வெளி ஆய்வு மைய தலைவர், ஜீன் வேஸ் லீ கால், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், இஸ்ரோவின், 'ககன்யான்' திட்டத்துக்கு, பிரான்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையம் உதவி செய்யும் என கூறினார்.
Parker Solar Probe

Parker Solar Probe

சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு செய்யும், பார்க்கர் சூரிய ஆய்வு விண்கலத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஆகஸ்ட் 12ல்  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதற்காக 1.5 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி). புளோரிடாவின் கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து டெல்டா 4- ஹெவி ராக்கெட்  மூலம் பார்க்கர் விண்கலம்,  விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஆளில்லா விண்கலம் ஒரு கார் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு, நமது சூரிய வளி மண்டலத்தில் சூரியனுக்கு மிகமிக அருகில் சென்று இது ஆய்வு செய்யும். அபரிமிதமான வெப்பத்தில் இருந்து காப்பாற்ற 4.5 அங்குலத்துக்கு ‘அல்ட்ரா வெப்ப தகடுகள் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளன. அதனால் சூரியனை விண்கலம் நெருங்கும்போது அதிக வெப்பத்தில் வெடித்து சிதறாமல் இருக்கும். இந்த விண்கலம் ஒரு மணி நேர
ககன்யான் 2022

ககன்யான் 2022

விண்வெளி ஆய்வில் பல மைல்கல் திட்டங்களை நிறைவேற்றி வரும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. ககன்யான் என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டம் 2022ம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என டெல்லியில் நடந்த சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கான தலைவராக 30 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவரான வி. ஆர். லலிதாம்பிகாவை இஸ்ரோ தலைவர் கே. சிவன் தேர்வு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரனில்  ஐஸ் படிமங்கள்

சந்திரனில் ஐஸ் படிமங்கள்

சந்திரனில் ஆய்வு நடத்த கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் ‘இஸ்ரோ’ நிறுவனம் சந்திராயன்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் நடத்திய ஆய்வில் சந்திரனில் உறைந்த நிலையில் ஐஸ் படிமங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவை கருப்பு நிறத்திலும், மிகவும் குளிராகவும் இருந்தது. எனவே இங்கு உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது என இஸ்ரோ தெரிவித்தது. அது குறித்து அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் சந்திரனின் தென் துருவத்தில் பெரும்பாலான ஐஸ் படிமங்கள் மிகவும் கடினமான நிலையில் அடர்த்தியாக உள்ளன. அதே நேரத்தில் வடதுருவத்தில் உள்ள ஐஸ் படிமங்கள் பரந்து விரிந்த நிலையில் அடர்த்தியற்று இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே சந்திரனில் சந்திராயன்-1 விண்கலம் கண்டுபிடித்தது ஐஸ் படிமங்கள்தான். ஆகவே அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது என நாசா விஞ்ஞானிக
error: Content is protected !!