Author: Buddhan Sattur

61வது கிராண்ட் மாஸ்டர்

61வது கிராண்ட் மாஸ்டர்

இந்தியாவின் 61வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்கிற பெருமையைப் ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது இனியன் பெற்றுள்ளார். பிரான்சில் நடைபெற்ற நாய்சியல்   ஓபன் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் ஃபெடோர்சக்கைத் தோற்கடித்து ஈஎல்ஓ தரவரிசையில் 2500 புள்ளிகளைக் கடந்துள்ளார் இனியன். இதையடுத்து கிராண்ட் மாஸ்டர் ஆவதற்கான முழுத்தகுதிகளை அடைந்து இந்தியாவின் 61வது கிராண்ட் மாஸ்டர் என்கிற பெருமையைத் தற்போது பெற்றுள்ளார்.
பெண்கள் மாநாடு

பெண்கள் மாநாடு

National Women Livelihood Meet-2019 மார்ச் 08/2019 - உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு, வாரணாசியில் நடைபெற்ற தேசிய பெண்கள் வாழ்வாதர மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.
World Womens Day

World Womens Day

மார்ச் 08 - உலக பெண்கள் தினம் சர்வதேச அளவில் பாலின சமத்துவம் எட்டப்பட வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டுக்கான மையக்கருத்தாக #BalanceForBetter என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வளமான எதிர்காலத்துக்கு பாலின சமத்துவம் என்பதே இதன் பொருள். உலக மகளிர் தினத்தை ஒட்டி சென்னை பெருநகர போலீஸ் ஒரு வீடியோவை உருவாக்கியுள்ளது.  #BalanceForBetter என்ற ஹேஷ்டேகின் கீழ் அது பகிரப்பட்டுள்ளது.
UNDP Ambassador

UNDP Ambassador

ஐ.நா. வளர்ச்சித்திட்டத்தின் (யு.என்.டி.பி.) நல்லெண்ண தூதராக  அமெரிக்க இந்திய நடிகை, மாடல் அழகி, சமையல் கலை வல்லுனர், டி.வி. நட்சத்திரம், எழுத்தாளர் என பல முகங்களை கொண்ட  பத்மலட்சுமி  நியமிக்கப்பட்டுள்ளார்.
அவசர சட்டம்

அவசர சட்டம்

வங்கிக் கணக்கு தொடங்கவும், செல்போன் சிம் கார்டு வாங்கவும் தாமாக முன்வந்து ஆதாரைப் பயன்படுத்த அனுமதிக்கும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த ஒப்புதல் வழங்கி உள்ளார். இதன்படி, வங்கிக் கணக்கு தொடங்கவும் செல்போன் சிம் கார்டு வாங்கவும் அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை வழங்க வாடிக்கையாளர்கள் தாமாக முன்வந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஆதார் எண்ணை கட்டாயமாக கேட்கக்கூடாது. அதேநேரம் தனியார் நிறுவனங்கள் ஆதார் முக்கிய தகவல்களை சேமிக்கக் கூடாது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு அதிகபட்சம் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.
விலையில்லா உணவு

விலையில்லா உணவு

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் கே. பழனிசாமி 04/03/2019ல் தொடங்கி வைத்தார்.
ரூ 2000 நிதியுதவி

ரூ 2000 நிதியுதவி

கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 04/03/2019 அன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப்பெறுவார்கள். அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இ அடங்கல் செயலி

இ அடங்கல் செயலி

பயிர் சாகுபடி நடைபெறும் விவசாய நிலங்களை பதிவு செய்யும் முறையை எளிமைப்படுத்தும் நோக்கில் வருவாய்த்துறை சார்பில் இ அடங்கல் கைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருவாய்த் துறையின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், கையால் எழுதப்படும் நிலையை மாற்றவும் தகவல் மேலாண்மை அமைப்பு மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, TNSMART செயலி ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், வெப்பசலனம், வெப்பக்காற்று எச்சரிக்கைகளை பெறும் வசதியும் தற்போது அளிக்கப்பட்டுள்ளது.
Kavalar Angadi App

Kavalar Angadi App

போலீஸ் கேண்டீனில் உள்ள பொருட்களின் இருப்பை அறிந்து கொள்ள காவலர் அங்காடி ( Kavalar Angadi App ) செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
error: Content is protected !!