3வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்தாவில் நடந்து வரும் 3வது பாரா ஆசிய விளையாட்டு போட்டியில்,

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சந்தீப் சவுத்ரி 3வது முயற்சியில் 60.01 மீட்டர் தூரம் எறிந்து புதிய உலக சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கமும் வென்றார். தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் சந்தீப் சவுத்ரி கால் அளவில் குறைபாடு கொண்டவர் ஆவார்.

பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ராஜூ ரக்‌ஷிதா 5 நிமிடம் 40.64 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ராஜூ ரக்‌ஷிதா குறைவான கண்பார்வை கொண்டவர் ஆவார்.

நீச்சல் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் இந்திய வீரர் ஜாதவ் சுயாஷ் நாராயண் 32.72 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். பெங்களூருவை சேர்ந்த ஜாதவ் சுபாஷ் நாராயண் 2 கைகளையும் பாதி இழந்தவர். நீச்சலுக்கு கை மிகவும் அவசியம் என்றாலும், அதனையும் சமாளித்து அவர் சாதித்து காட்டி இருக்கிறார்.

மகளிர் பிரிவு கிளப் த்ரோ (தடி வீசுதல்) போட்டியில் இந்தியாவின் ஏக்தா பியான் 4வது முயற்சியில் 16.02 மீட்டர் தொலைவுக்கு சிறந்த முறையில் தடி எறிந்து தங்கம் வென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!