Day: March 8, 2019

அவசர சட்டம்

அவசர சட்டம்

வங்கிக் கணக்கு தொடங்கவும், செல்போன் சிம் கார்டு வாங்கவும் தாமாக முன்வந்து ஆதாரைப் பயன்படுத்த அனுமதிக்கும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த ஒப்புதல் வழங்கி உள்ளார். இதன்படி, வங்கிக் கணக்கு தொடங்கவும் செல்போன் சிம் கார்டு வாங்கவும் அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை வழங்க வாடிக்கையாளர்கள் தாமாக முன்வந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஆதார் எண்ணை கட்டாயமாக கேட்கக்கூடாது. அதேநேரம் தனியார் நிறுவனங்கள் ஆதார் முக்கிய தகவல்களை சேமிக்கக் கூடாது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு அதிகபட்சம் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.
விலையில்லா உணவு

விலையில்லா உணவு

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் கே. பழனிசாமி 04/03/2019ல் தொடங்கி வைத்தார்.
ரூ 2000 நிதியுதவி

ரூ 2000 நிதியுதவி

கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 04/03/2019 அன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப்பெறுவார்கள். அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இ அடங்கல் செயலி

இ அடங்கல் செயலி

பயிர் சாகுபடி நடைபெறும் விவசாய நிலங்களை பதிவு செய்யும் முறையை எளிமைப்படுத்தும் நோக்கில் வருவாய்த்துறை சார்பில் இ அடங்கல் கைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருவாய்த் துறையின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், கையால் எழுதப்படும் நிலையை மாற்றவும் தகவல் மேலாண்மை அமைப்பு மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, TNSMART செயலி ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், வெப்பசலனம், வெப்பக்காற்று எச்சரிக்கைகளை பெறும் வசதியும் தற்போது அளிக்கப்பட்டுள்ளது.
Kavalar Angadi App

Kavalar Angadi App

போலீஸ் கேண்டீனில் உள்ள பொருட்களின் இருப்பை அறிந்து கொள்ள காவலர் அங்காடி ( Kavalar Angadi App ) செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமிய கூட்டமைப்பு

இஸ்லாமிய கூட்டமைப்பு

அபுதாபியில் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா உட்பட பல்வேறு இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் இஸ்லாமிய நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ள நிலையில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியாவுக்கு இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. இதனை ஏற்று இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.
ரோபோ செய்தி வாசிப்பாளர்

ரோபோ செய்தி வாசிப்பாளர்

சீன அரசுக்கு சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம்  உலகிலேயே முதன்முறையாக பெண் ரோபோவை செய்தி வாசிப்பாளராக பயன்படுத்தி உள்ளது. ஜின் ஜியோமெங் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, குட்டை தலைமுடி, இளஞ்சிவப்பு மேலாடை, காதணி அணிந்தபடி வடிவமைக்கப்பட்டிருந்தது. ஜின்ஹுவா செய்தி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணிபுரியும் க்யூ மெங்கின் உருவத்தில் அமைந்துள்ள இந்த ரோபோவை ஜின்ஹுவா மற்றும் சோகு இன்க் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதன் மூலம் உலகின் முதல் பெண் ரோபோ செய்தி வாசிப்பாளர் என்ற பெருமை இதற்குக் கிடைத்துள்ளது. சீனாவின் வூசென் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற உலக இணையதள மாநாட்டில், 2 ஆண்  ரோபோ செய்தி வாசிப்பாளர்களை ஜின்ஹுவா நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மக்ரான் கோப்பை

மக்ரான் கோப்பை

ஈரானில் உள்ள சாபஹார் நகரில் நடைபெற்ற மக்ரான் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்தியா ஒரு தங்கம் உட்பட 8 பதக்கங்களை வென்றுள்ளது. 49 கிலோ எடைப் பிரிவில்  இந்தியாவின் தீபக் சிங், தங்கப் பதக்கம் வென்றார்.  
தலைமை விஞ்ஞானி

தலைமை விஞ்ஞானி

இந்தியாவின் முதுபெரும் வேளாண் விஞ்ஞானியும் பசுமை புரட்சியின் தந்தை என அறியப்படுபவருமான    எம்.எஸ். சுவாமிநாதனின் மகள் டாக்டர். சவுமியா சுவாமிநாதன் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டுள்ளார். காசநோய் ஆராய்ச்சியாளரான இவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பணியாற்றினார். தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் திட்டங்களுக்கான துணை இயக்குநராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். தற்போது பதவி உயர்வு அளிக்கப்பட்டு அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  
error: Content is protected !!