Month: February 2019

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடமாகாண மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும், உற்பத்தியை அதிகரிப்பதற்கும், வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும்,  யாழ்ப்பாணம் நகரில் இந்தியாவின் உதவியுடன் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்தானது. இலங்கைக்கான இந்தியத் தூதர் தரண்ஜித் சிங் சாந்து மற்றும் இலங்கைக்கான சர்வதேச வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் கொடிகாரா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.  
சியோல்  அமைதி  விருது

சியோல் அமைதி விருது

ஏழை- பணக்காரர் இடையிலான சமூக மற்றும் பொருளாதார வித்தியாசத்தைக் குறைத்ததற்காகவும் உலக அமைதிக்காகப் பங்காற்றியதற்காகவும் இந்தியப் பிரதமர் மோடிக்கு 2018ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறும் 14-வது நபராக மோடி திகழ்கிறார். 1990ம் ஆண்டு முதல் வழங்கப்படும் சியோல் அமைதி விருது, அதே ஆண்டு சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நினைவாகத் தொடங்கப்பட்டது. முந்தைய ஆண்டுகளில் ஐ.நா. முன்னாள் செயலர் கோபி அன்னன், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  
விதர்பா அணி வெற்றி

விதர்பா அணி வெற்றி

நாக்பூரில் நடைபெற்ற இரானி கோப்பை இறுதிப்போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை வீழ்த்தி  விதர்பா அணி கோப்பையை 2வது முறையாக வென்றது. இந்த ஆண்டின்  ரஞ்சி கோப்பையையும் விதர்பா அணி வென்றுள்ளது.
லாசரஸ்  விருது

லாசரஸ் விருது

ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகள், அணிகள், அமைப்புகள் ஆகியவற்றுக்கு உயரிய விருதான லாரஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2018ம்  ஆண்டில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான விருது  மொனாக்கோவில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த வீரர் ==  டென்னிஸ்  வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சிறந்த வீராங்கனை ==  அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான சிமோன் பில்ஸ் சிறந்த அணி ==  உலகக் கோப்பை கால்பந்தில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணி திருப்பு முனையை ஏற்படுத்தியவர் ==  ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை  நவோமி ஒசாகா வாழ்நாள் சாதனையாளர் == ஆர்சனல் கால்பந்து அணியின் முன்னாள் மேலாளர் அர்சென் வெங்கர் சிறந்த விருது  பிரிவில் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிராமப்புற பகுதிகளில் செயல்பட்டு வரும் யுவா அமைப்புக்கு விருது வழங்கப்பட்டது. இந்த அ
சவுரப் சவுத்ரி  சாதனை

சவுரப் சவுத்ரி சாதனை

டெல்லியில் நடைபெறும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் 16வயது நிரம்பிய இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி 10 எம். ஏர்பிஸ்டர் பிரிவில்  தங்கம் வென்று டோக்கியோ  ஒலிம்பிக்  போட்டிக்கு தகுதி  பெற்றுள்ளார். இவருக்கு  முன் 10எம் ஏர்ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றுள்ளார்.
error: Content is protected !!