Day: October 6, 2018

Exercise Indra 2018

Exercise Indra 2018

இந்தியா மற்றும் ரஷ்யா ராணுவங்கள் இணைந்த பயிற்சி Indra - 2018, உத்தரகாண்ட்டில்  நவம்பர் 18 முதல் 28 வரை நடைபெறவிருக்கிறது.
நான்சென் அகதி விருது

நான்சென் அகதி விருது

UNHCR’s Nansen Refugee Award 2018  ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் சார்பிலான நான்சென் அகதி விருது, தெற்கு சூடானைச் சேர்ந்த அறுவைசிகிச்சை நிபுணர் Dr. Evan Atar Adaha க்கு வழங்கப்பட்டுள்ளது.
IL and FS

IL and FS

பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்திவரும் IL & FS ( Infrastructure Leasing & Financial Services Ltd ) நிறுவனம் திவாலாகும் சூழ்நிலையில் இருப்பதால், அந்நிறுவனத்தை மத்திய அரசு கைப்பற்றியுள்ளது. IL & FS நிறுவனத்தை நிர்வகிக்க  உதய் கோடக் தலைமையில் ஆறு பேர் கொண்ட புதியஇயக்குநர் குழுவை அரசு  அமைத்துள்ளது. முன்னாள் ஐசிஐசிஐ வங்கித்தலைவர் ஜி.சி சதுர்வேதி, முன்னாள்ஐஏஎஸ் அதிகாரியும், டெக் மஹிந்திரா தலைவருமான வினித் நய்யார், முன்னாள் செபி தலைவர் ஜி.என்.பாஜ்பேய், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் மாலினி சங்கர், நந்தா கிஷோர் ஆகியோர் இயக்குநர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனத்தின் விவகாரத்தில் அரசு உடனடியாக  நடவடிக்கை எடுப்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன் 2009ல், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் விவகாரத்தில் அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்தது க
jfarm services App

jfarm services App

விவசாயிகள் பயன்பெறும் வகை யில் செயலி (ஆப்) ஒன்றை டிராக்டர் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள டாஃபே நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. ஜேஃபார்ம்சர்வீசஸ் ஆப் ( jfarm services App ) என்ற பெயரிலான இந்த செயலி மூலம் விவசாயிகள் தங்களது டிராக்டர் மற்றும் விவசாயக் கருவிகளை மற்ற விவசாயிகளுக்கு வாடகைக்கு விட முடியும். இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். இடைத்தரகர் எவருமின்றி விவசாயிகள் இந்த செயலி மூலம் வாடகையை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.
முதலீட்டாளர்கள் மாநாடு

முதலீட்டாளர்கள் மாநாடு

The Make In Odisha Conclave 2018 ஒடிசா மாநில அரசின் சார்பிலான முதலீட்டாளர்கள் மாநாடு  மேக் இன் ஒடிசா கான்கிளேவ் 2018, நவம்பர் 11 முதல் 15 வரை புவனேஸ்வரில் நடைபெறவிருக்கிறது.
ஒடிசா பவன்

ஒடிசா பவன்

ஒடிசா மாநிலத்தில் இருந்து வரும் முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தங்கும் வகையில் சென்னையில் கட்டப்பட்டுள்ள ஒடிசா பவனை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் திறந்து வைத்துள்ளார்.
சுனாமி

சுனாமி

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் செப்டம்பர் 27ல் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியதில் பலு நகரில் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலு நகருக்கு அருகே உள்ள டொங்காலா மற்றும் மமுஜு நகரங்களையும் சுனாமி தாக்கியது.
Hepatitis E Virus

Hepatitis E Virus

உலகிலேயே முதன்முறையாக, எலியின் கழிவு கலந்த உணவை  உட்கொண்டதன் மூலம், ஹாங்காங்கைச் சேர்ந்த நபர்  ஹெபடைடிஸ் ஈ வைரஸ் ( HEV ) பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார். இவரது கல்லீரல் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். எலியின் கழிவு மூலமாகவும் மனிதருக்கு ‘ஹெபடைடிஸ் ஈ’ வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்பது நிரூபணமாகியிருக்கிறது.
வங்கி தலைவராக பெண்

வங்கி தலைவராக பெண்

சௌதி அரேபியாவின் வரலாற்றில் முதல்முறையாக வங்கியொன்றின் தலைவராக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதுள்ள சௌதி பிரிட்டிஷ் பேங்க் மற்றும் அலவ்வால் பேங்க் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய வங்கியின் தலைவராக சௌதி அரேபியாவின் பிரபல பெண் தொழிலதிபர் லுப்னா அல் ஒலயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
error: Content is protected !!