Month: October 2018

Clear Sky Exercise

Clear Sky Exercise

அமெரிக்கா மற்றும் 6 NATO நாடுகளுடன் இணைந்து Clear Sky 2018 என்ற விமானப்படை பயிற்சியில் உக்ரைன் ஈடுபட்டு வருகிறது.
ஆசிய பாரா விளையாட்டு

ஆசிய பாரா விளையாட்டு

3வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி, ஜகார்த்தா,  இந்தோனேஷியா. வில்வித்தை போட்டியில் ஆண்களுக்கான தனிநபர் ரிகர்வ் இறுதிசுற்றில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங்,  ஜாவ் லிஸ்னேவை (சீனா) வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார். உயரம் தாண்டுதலில் ( T42/63 ) 3 பதக்கங்களையும் இந்தியர்களே வென்றுள்ளனர். ● தங்கம் == சரத்குமார் ( 1.90 மீட்டர் ) ● வெள்ளி == வருண் பாட்டி ( 1.82 மீட்டர் ) ● வெண்கலம் == தங்கவேலு மாரியப்பன் ( 1.69 மீட்டர் ) தமிழ்நாடு
வரி குறைப்பு

வரி குறைப்பு

பெட்ரோலிய பொருட்கள் விலை அதிகரித்து வரும் நிலையில், விமான எரிபொருள் மீதான உற்பத்தி வரியை 14 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. ( அக்டோபர் 10 )
சீக்கிய பெண்களுக்கு விதிவிலக்கு

சீக்கிய பெண்களுக்கு விதிவிலக்கு

சண்டிகார் யூனியன் பிரதேசத்தில்  உள்ள சீக்கிய பெண்கள் ஹெல்மெட் அணிவதற்கு விதிவிலக்கு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே டெல்லியில் சீக்கிய பெண்களுக்கு ஹெல்மெட் அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மின் வழிக் கட்டணம்

மின் வழிக் கட்டணம்

உலக அளவில் மின் வழிக் கட்டணங்களை (e-Payments) நடைமுறைப் படுத்தும் அரசுகளில், 2018-ம் இந்திய அரசு 28வது இடத்தில் இருப்பதாக எகனாமிக் இன்டெலிஜென்ஸ் யூனிட் அக்டோபர் 3 அன்று தெரிவித்திருக்கிறது. 73 நாடுகள் இடம்பெற்றிருந்த ‘Government e-Payments Adoption Ranking’ என்ற தரவரிசைப் பட்டியலில் நார்வே அரசு முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.
Quintero One

Quintero One

உலகின் முதல் ‘ஹைப்பர்லூப் பயணிகள் கேப்ஸ்யூலை’ அமெரிக்காவின் ஹைப்பர்லூப் போக்குவரத்துத் தொழில்நுட்ப நிறுவனம் ஸ்பெயினில் அக்டோபர் 3 அன்று அறிமுகம் செய்திருக்கிறது. 2019-ம் ஆண்டிலிருந்து இந்த கேப்ஸ்யூல் பயன்பாட்டுக்கு வரும் என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ‘குவின்டெரோ ஒன்’ ( Quintero One ) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த கேப்ஸ்யூல் ஒருமணி நேரத்தில் 700 மைல்களைக் கடக்கும் வேகத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
3வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி

3வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்தாவில் நடந்து வரும் 3வது பாரா ஆசிய விளையாட்டு போட்டியில், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சந்தீப் சவுத்ரி 3வது முயற்சியில் 60.01 மீட்டர் தூரம் எறிந்து புதிய உலக சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கமும் வென்றார். தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் சந்தீப் சவுத்ரி கால் அளவில் குறைபாடு கொண்டவர் ஆவார். பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ராஜூ ரக்‌ஷிதா 5 நிமிடம் 40.64 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ராஜூ ரக்‌ஷிதா குறைவான கண்பார்வை கொண்டவர் ஆவார். நீச்சல் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் இந்திய வீரர் ஜாதவ் சுயாஷ் நாராயண் 32.72 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். பெங்களூருவை சேர்ந்த ஜாதவ் சுபாஷ் நாராயண் 2 கைகளையும் பாதி இழந்தவர். நீச்சலுக்கு கை மிகவும் அவச
Youth Olympics

Youth Olympics

இளையோர் ஒலிம்பிக் போட்டி, பியூனஸ்அயர்ஸ், அர்ஜென்டினா. இந்தியாவின் ஜெரேமி லால்ரினங்கா மொத்தம் 274 கிலோ (124 மற்றும் 150) எடையை தூக்கி தங்கம் வென்றுள்ளார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி மற்றும்   இந்திய வீராங்கனை மனு பாகேர் ஆகியோர்  தங்கம் வென்றுள்ளார்கள்.
ISI தலைவர்

ISI தலைவர்

பாகிஸ்தான் உளவுத்துறை தலைவராக ( ISI ) லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பாக ராணுவ உளவுப்பிரிவில் தலைவராக பணியாற்றி வந்தார். சமீபத்தில்தான் இவருக்கு லெப்டினன்ட் ஜெனரல் அந்தஸ்தை ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா தலைமையிலான ராணுவ பதவி உயர்வு வாரியம் வழங்கியது. இவர் வடக்கு பிராந்திய ராணுவ தளபதி பதவியிலும் இருந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இவருக்கு ‘ஹிலால் இ இம்தியாஸ்’ என்ற பாகிஸ்தானின் இரண்டாவது உயர்ந்த தேசிய விருது வழங்கப்பட்டது.
error: Content is protected !!