ஹைட்ரோ கார்பன் அகழாய்வு

தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் டெல்லியில் அக்டோபர் 01ல்  கையெழுத்தாகியுள்ளது.

இதில், தூத்துக்குடியின் ஸ்டெர் லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனத்துக்கு 41, ஆயில் இந்தியாவுக்கு 9, ஓஎன்ஜிசிக்கு 2, கெயில், பாரத் பெட்ரோ ரிசோர்ஸ், இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் கம்பெனி ஆகிய பொதுத் துறை நிறுவனங்களுக்கு தலா ஒரு இடங்கள் கிடைத்துள்ளன. மொத்தம் உள்ள 55 இடங்களில் நிலப் பகுதியில் 46, கடல் பகுதியில் 9 இடங்கள் அமைய உள்ளன. இவற்றில் 3 இடங்கள் தமிழகத்தில் உள்ளன.

புதுச்சேரியின் காரைக்காலில் தொடங்கி தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை ஒட்டிய ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தாவுக்கு 2 இடங்கள் கிடைத்துள்ளன. இதுதவிர, பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசிக்கு சிதம்பரத்தை ஒட்டிய நிலப்பகுதியில் ஓர் இடம் கிடைத்துள்ளது.

OALP (Open Acreage Licensing Policy) எனப்படும் ஏக்கர் அளவிலான இந்த டெண்டர்கள் நெடுவாசலைவிட பல மடங்கு பெரிதானவை. எனவே, வேதாந்தா நிறுவனத்துக்கு 2,574 மற்றும் 1,794 சதுர கி.மீ. மற்றும் ஓஎன்ஜிசிக்கு 731 சதுர கி.மீ. அளவுகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!