ஸ்டெர்லைட் ஆராய குழு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையையும் அதனால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து அப்பகுதியை ஆய்வு செய்யவும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம்  உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த குழுவில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்  எனவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவுக்கு, பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜே. வஜீஃப்தாரை  தலைவராக நியமித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் – நீதிபதி ஏ. கே. கோயல்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!