விவசாய கொள்முதல் கொள்கை

வேளாண்துறை அமைச்சகம் சார்பில் அன்னதத்தா மவுல்யா சம்ரக் ஷன  யோஜனா  { Annadata Maulya Samrakshana Yojana }  என்ற பெயரில் புதிய கொள்முதல் கொள்கை உருவாக்கப்பட்டு மத்திய அரசிடம்  சமர்ப்பிக்கப்பட்டது.  இக்கொள்முதல் கொள்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தப் புதிய கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் :-

எண்ணெய் வித்துக்களின் விலையானது, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறையும் சமயங்களில், விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்வதற்காக இரு வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஒன்று, விலை சரிவு ஈட்டுத்தொகை திட்டம் {  Price Deficiency Payment (PDP) }மற்றொன்று, எண்ணெய் வித்துக்களை தனியார் பங்களிப்புடன் மாநில அரசுகள் கொள்முதல் செய்யும் திட்டம்.

இதில், முதலாவதான பிடிபி திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும், எண்ணெய் வித்துக்களின் மாதாந்திர சராசரி விலைக்கும் இடையேயான வித்தியாசத் தொகையை விவசாயிகளுக்கு மாநில அரசுகள் வழங்க வேண்டும்.

இரண்டாவது திட்டத்தின்படி, எண்ணெய் வித்துக்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை செலுத்தி, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து அவற்றை மாநில அரசுகளே கொள்முதல் செய்ய வேண்டும். இத்திட்டங்களின் மூலமாக நஷ்டத்திலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!