விபத்து காப்பாளர்

The Karnataka Good Samaritan and Medical Professional (Protection and Regulation during Emergency Situations) Bill, 2016.

நாட்டில் முதல்முறையாக விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுபவர்களை பாதுகாக்கும் வகையில் கர்நாடகாவில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மசோதாவுக்கு  ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவும் மனப்பான்மை மக்களிடம் குறைவாக உள்ளது. குறிப்பாக, உதவி செய்பவர்கள் பல்வேறு சட்டச் சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால், கண்முன்னே விபத்து நடந்தாலும் ‘நமக்கு எதுவுக்கு வம்பு’ என்ற நினைப்பில் கடந்து  செல்பவர்களே அதிகம். விபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்பவர்களை பாதுகாக்கும் வகையிலான சட்டம் எதுவும் மத்தியில் இல்லை. இதையடுத்து, உச்ச  நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், கடந்த 2015ல் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சில வழிமுறைகளை வகுத்துள்ளது.

இதனிடையே, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி உள்ளிட்டவற்றை வழங்கி, அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவர்களை பாதுகாக்கும் சட்டத்தை  கர்நாடக அரசு கொண்டு வந்துள்ளது. ‘கர்நாடகா சிறந்த சமாரிடன் மற்றும் மருத்துவ தொழில்முறை சட்டம் 2016’ என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!