லாசரஸ் விருது

ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகள், அணிகள், அமைப்புகள் ஆகியவற்றுக்கு உயரிய விருதான லாரஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது.

2018ம்  ஆண்டில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான விருது  மொனாக்கோவில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த வீரர் ==  டென்னிஸ்  வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்

சிறந்த வீராங்கனை ==  அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான சிமோன் பில்ஸ்

சிறந்த அணி ==  உலகக் கோப்பை கால்பந்தில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணி

திருப்பு முனையை ஏற்படுத்தியவர் ==  ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை  நவோமி ஒசாகா

வாழ்நாள் சாதனையாளர் == ஆர்சனல் கால்பந்து அணியின் முன்னாள் மேலாளர் அர்சென் வெங்கர்

சிறந்த விருது  பிரிவில் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிராமப்புற பகுதிகளில் செயல்பட்டு வரும் யுவா அமைப்புக்கு விருது வழங்கப்பட்டது. இந்த அமைப்பானது பின்தங்கிய சமூகத்தில் உள்ள இளம் பெண்களின் வாழ்க்கையை கால்பந்து விளையாட்டு மூலம் மேம்படுத்தும் பணிகளை ஜார்க்கண்ட் பகுதிகளில் மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் லாரஸ் விருதை நீத்தா குமாரி, ஹேமா குமாரி, கோனிகா குமாரி, ராதா குமாரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!