ரோபோ செய்தி வாசிப்பாளர்

சீன அரசுக்கு சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம்  உலகிலேயே முதன்முறையாக பெண் ரோபோவை செய்தி வாசிப்பாளராக பயன்படுத்தி உள்ளது.

ஜின் ஜியோமெங் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, குட்டை தலைமுடி, இளஞ்சிவப்பு மேலாடை, காதணி அணிந்தபடி வடிவமைக்கப்பட்டிருந்தது. ஜின்ஹுவா செய்தி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணிபுரியும் க்யூ மெங்கின் உருவத்தில் அமைந்துள்ள இந்த ரோபோவை ஜின்ஹுவா மற்றும் சோகு இன்க் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதன் மூலம் உலகின் முதல் பெண் ரோபோ செய்தி வாசிப்பாளர் என்ற பெருமை இதற்குக் கிடைத்துள்ளது.

சீனாவின் வூசென் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற உலக இணையதள மாநாட்டில், 2 ஆண்  ரோபோ செய்தி வாசிப்பாளர்களை ஜின்ஹுவா நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!