ரூபாய் 50 லட்சம் நஷ்டஈடு

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது கேரள காவல்துறை அதிகாரிகள் தவறான முறையில் திட்டமிட்டு வழக்கு பதிவு செய்தது உறுதியானதால் அவருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

மேலும், விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே ஜெயின் தலைமையில்  கமிட்டி  அமைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்த கமிட்டியில் மத்திய அரசு மற்றும் கேரள அரசு சார்பில் தலா ஒருவர் இடம் பெறுவர் என கூறப்பட்டுள்ளது.

விஞ்ஞானி நம்பி நாராயணன் கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்களில் (cryogenic engine technology) முதன்மையானவராக செயல்பட்டவர். 1994ம் ஆண்டு பாதுகாப்பு ரகசியங்களை உளவுபார்த்ததாக மத்திய புலனாய்வுத்துறை தவறுதலாக இவரை கைது செய்தது. 1998ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அவர் நிரபராதி என்று தீப்பளித்து விடுவித்தது. இந்த வழக்கால் அவர் அடைந்த மன உளைச்சல்களையும், பாதிப்புகளை Ready to fire : How India and I survived the ISRO spy case  என்ற புத்தகத்தில் நாராயணன் பதிவுசெய்துள்ளார். இந்த புத்தகத்தை தழுவி உருவாகும் இந்த படத்தில் மாதவன் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார். இதற்கு முன் Orbit Of Memories என்ற புத்தகத்தைையும்  எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!