புதிய வடிவமைப்பு நிறுவனங்கள்

நாட்டில் புதிதாக நான்கு தேசிய வடிவமைப்பு நிறுவனங்கள் அமைப்பதற்காக நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் சட்டத்திருத்த (2014) மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை செப்டம்பர் 12 அன்று ஒப்புதல் வழங்கியது. இதன்மூலம், ஆந்திராவில் அமராவதி, மத்தியப் பிரதேசத்தில் போபால், அசாமில் ஸோர்ஹாட், ஹரியாணாவில் குருக்ஷேத்ரா ஆகிய நான்கு நகரங்களில் தேசிய வடிவமைப்பு நிறுவனங்கள் தொடங்கப்படவிருக்கின்றன.

அகமதாபாத்தில் 1961-ம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தைப் போன்று புதிதாக ஆரம்பிக்கப்படும் நிறுவனங்களும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!