பண்டைய நாணயம் கண்டுபிடிப்பு

பழனி சண்முகநதி ஆற்றில் கொங்கு சேர மன்னர் கால நாணயம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த  நாணயம் செம்பினால் ஆனது. இந்த நாணயம் ஒழுங்கற்ற வட்ட வடிவமாக உள்ளது. நாணயத்தின் ஒருபக்கத்தில் கொங்கு சேர அரசின் முத்திரை பொறிக்கப்பட்டு உள்ளது. இடது பகுதியில் வில்லும், அதற்கடுத்து யானையும், பனைமரமும் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த அடையாளங்கள் பண்டைய சேர அரசின் முத்திரைகளாகும். நாணயத்தின் மேல்பகுதியில் மங்களவிளக்கு உள்ளது. ஓரங்களில் 8 வட்டப்புள்ளிகள் உள்ளன. நாணயத்தின் மறுபக்கத்தில் பலிபீடத்தின் குறுக்காக வைக்கப்பட்ட 2 வாள்கள் உள்ளன. இடது மற்றும் வலது ஓரங்களில் மங்கள விளக்குகள் உள்ளன. மேலும் 9 வட்டப்புள்ளிகள் உள்ளன.
சேர நாட்டையும் (தற்போதைய கேரளம்), தமிழகத்தின் கொங்கு பகுதிகளையும் ஆண்டு வந்த சேர மன்னர்கள் கொங்கு சேரர்கள் என்று அழைக்கப்பட்டனர். கொங்கு சேர மன்னர்களின் நாணயம் அரிதாகவே கிடைக்கின்றன. தற்போது கிடைத்து இருக்கும் இந்த நாணயம் ஒரு அரியவகையை சேர்ந்தது ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!