நூறாவது பட்டம்

துபாயில் நடைபெற்ற  ஆண்களுக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஸ்டெபானோஸ் சிட்சிபாசை (கிரீஸ்) வீழ்த்தி 8 வது முறையாக கோப்பையை வென்றுள்ளார்.

22 ஆண்டுகளாக சர்வதேச டென்னிசில் விளையாடி வரும் ரோஜர் பெடரருக்கு, ஒற்றையர் பிரிவில் இது 100வது சர்வதேச பட்டமாக அமைந்தது. இதில் 20 கிராண்ட்ஸ்லாம் மகுடமும் அடங்கும். இதன் மூலம் ‘ஓபன் எரா’ வரலாற்றில் (அமெச்சூர் வீரர்களுடன் இணைந்து தொழில்முறை வீரர்களும் அனுமதிக்கப்பட்ட 1968ம் ஆண்டில் இருந்து) இந்த மைல்கல்லை எட்டிய 2வது வீரர் என்ற பெருமையை 37 வயதான பெடரர் பெற்றார். இந்த வகையில் அமெரிக்க ஜாம்பவான் ஜிம்மி கனோர்ஸ் 109 பட்டங்களுடன் முதலிடம் வகிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!