சர்வதேச துப்புரவு மாநாடு

மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாடு { Mahatma Gandhi International Sanitation Convention – MGISC }, செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 04 வரை  புதுடெல்லியில் நடைபெற்றுள்ளது.

மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாடு, உலகம் முழுவதும் உள்ள தண்ணீர், துப்புரவு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள் இதர தலைவர்களை ஒரணியில் திரட்டிய நான்காவது சர்வதேச மாநாடு ஆகும்.  இதையொட்டி அமைக்கப்பட்ட டிஜிட்டல் கண்காட்சியை,  ஐ நா  தலைமைச் செயலாளர் திரு அண்டோனியோ குட்ரஸுடன் இணைந்து பிரதமர் பார்வையிட்டார். மகாத்மா காந்தியின் நினைவு அஞ்சல்தலை மற்றும் மகாத்மா காந்தியின் பிரசித்திப்பெற்ற ‘ வைஷ்ணவ ஜன தோ’ என்ற பாடல் அடங்கிய குறுந்தகட்டை இரு தலைவர்களும் வெளியிட்டனர்.  தூய்மை இந்தியா விருதுகளும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.

தென்னிந்தியாவில் தெலங்கானாவில் உள்ள பெட்டப்பள்ளி தரவரிசையில் முதலாவது மாவட்டமாகவும்,  தூத்துக்குடி இரண்டாவது மாவட்டமாகவும் தேர்வு  செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!