குல்தீப் யாதவ் சாதனை

அனைத்து ரக (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) கிரிக்கெட் போட்டிகளிலும் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற  சாதனையைப் இந்திய பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் படைத்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் குல்தீப் யாதவ் இந்த அரிய சாதனைப் படைத்த 2வது இந்திய வீரர் ஆவார்.

இதற்கு முன்பாக புவனேஸ்வர் குமார் இச்சாதனையை செய்த முதல் இந்திய பந்துவீச்சாளராக திகழ்கிறார்.

3 ரக போட்டிகளிலும் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் :

  • டிம் சௌத்தி (நியூஸிலாந்து)
  • அஜந்தா மெண்டீஸ் (இலங்கை)
  • உமர் குல் (பாகிஸ்தான்)
  • லசித் மலிங்கா (இலங்கை)
  • இம்ரான் தாஹிர் (தென் ஆப்பிரிக்கா)
  • புவனேஸ்வர் குமார் (இந்தியா)
  • குல்தீப் யாதவ் (இந்தியா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!