கலப்பு மருந்துகளுக்குத் தடை

உடல்நலத்தைப் பாதிக்கும் அம்சங்கள் இருக்கக்கூடிய 328 கலப்பு மருந்துகளுக்கு (Fixed Dose Combinations) ‘மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரிய’த்தின் (DTAB) அறிவுரைப்படி, மத்திய சுகாதார அமைச்சகம் செப்டம்பர் 12 அன்று தடைவிதித்தது. மருந்துகள், ஒப்பனைப் பொருட்கள் சட்டத்தின் 26 A பிரிவின்படி, 2017-ம் ஆண்டில் 344 கலப்பு மருந்துகள் தடைசெய்யப்பட்டன.

இதை எதிர்த்து மருந்து உற்பத்தியாளர்கள் தொடர்ந்த வழக்கில், ‘மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரிய’த்தை மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில், தற்போது 328 கலப்பு மருந்துகளுக்குத் தடைவிதிக்குமாறு மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது

தற்போது இதில் சாரிடான் உள்ளிட்ட 3 வகை மருந்துகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பிரமல் ஹெல்த்கேர் நிறுவனத்தின் சாரிடான், கிளாக்ஸோ ஸ்மித்க்லைன் நிறுவனத்தின் பிரிடான், ஜக்கத் பார்மாவின் டார்ட் மற்றொரு மருந்து ஆகியவற்றுக்குத் தடை நீக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மற்ற மருந்துகளுக்கு ( 325) விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!