ஏவுதளம் அமைக்க குழு

இஸ்ரோவின் ராக்கெட்களை ஏவுவதற்கு 3வது புதிய ஏவு தளம் அமைப்பது குறித்த சாத்தியங்களை ஆராய இஸ்ரோவின் விண்வெளித் துறை பேராசிரியர் நாராயணா தலைமையில் விஞ்ஞானிகள் அண்ணாமலை, அபேகுமார், கனங்கோ, சுதிர்குமார், சேஷகிரி ராவ், சோமநாத் ஆகிய 7 பேர்  கொண்ட  வல்லுநர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து செயற்கைக் கோள்களும் தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருக்கும் இரு ராக்கெட் ஏவுதளங்களில் இருந்தே விண்ணில் செலுத்தப்படுகின்றன.

உலகிலேயே ராக்கெட் ஏவுவதற்கு மிக உகந்த இடம் பூமத்திய ரேகைக்கு 5 டிகிரியில் நெருக்கமான கோணத்தில் இருக்கும் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானா. அடுத்தபடியாக, ஸ்ரீஹரி கோட்டா ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு 13.43 டிகிரியில் இருக்கிறது.  தமிழகத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் 8 டிகிரியில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!