அவசர சட்டம்

வங்கிக் கணக்கு தொடங்கவும், செல்போன் சிம் கார்டு வாங்கவும் தாமாக முன்வந்து ஆதாரைப் பயன்படுத்த அனுமதிக்கும் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த ஒப்புதல் வழங்கி உள்ளார்.

இதன்படி, வங்கிக் கணக்கு தொடங்கவும் செல்போன் சிம் கார்டு வாங்கவும் அடையாள ஆவணமாக ஆதார் எண்ணை வழங்க வாடிக்கையாளர்கள் தாமாக முன்வந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஆதார் எண்ணை கட்டாயமாக கேட்கக்கூடாது. அதேநேரம் தனியார் நிறுவனங்கள் ஆதார் முக்கிய தகவல்களை சேமிக்கக் கூடாது. இந்த சட்டத்தை மீறுவோருக்கு அதிகபட்சம் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!